உப்பும் வெளிச்சமும்மாதிரி

Salt And Light

5 ல் 3 நாள்

இயேசு வாழ்ந்த காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிவிளக்குகள் மிகவும் அவசியமானதாக இருந்தது. அவைகள் தங்கள் பிரகாசத்தால் இருளை விரட்டி, வீடு முழுவதையும் வெளிச்சத்தால் நிரப்பின. கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட உலகத்திற்கு இதையே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம்.

வெளிச்சமில்லாத உலகத்தை சற்றே நினைத்துப்பாருங்கள். எல்லா விதங்களிலும் நம்முடைய வாழ்க்கை எப்படி மாறியிருக்கும்!

அப்படிப்பட்ட ஒரு உலகம் பாதுகாப்பற்றதாக இருக்கும். நம்மால் மற்றவர்களையும் அவர்கள் செய்யும் காரியங்களையும் பார்க்கமுடியாது. நம்முடைய அன்றாட செயல்களை நாம் செய்வதே மிகவும் கடினமாக இருக்கும். வெளிச்சமில்லாத உலகம் ஒரு கொடுமையானது. ஏனென்றால் இருளே எல்லா தீமைகளையும் ஆபத்துகளையும் மறைக்கிறது. 

இயேசுவுக்கு இரகசிய சீஷனாக இருப்பதினால் அதிகளவில் பயனில்லை என்றே இயேசு இதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார். இருளால் வெல்லமுடியாத வெளிச்சமாகவே தாம் இந்த உலகத்திற்கு இருப்பதாக இயேசு கூறியிருக்கிறார்.

இயேசு இந்த உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறார். நம்முடைய வார்த்தைகளினாலும், செயல்பாடுகளினாலும் அவரை சாட்சியிட்டு இந்த உலகத்திற்கு அறிவிப்பதே நம்முடைய வேலை. சக மனிதர்கள் இயேசுவை கண்டுகொள்ள நாம் உதவாதவரையிலும் இந்த உலகத்தால் இருளை மேற்கொள்ள முடியாது.

உங்களால் இருளில் வெளிச்சத்தை சேர்க்கமுடியும், ஆனால் ஒருபோதும் வெளிச்சத்தில் இருளை சேர்க்கமுடியாது. உங்கள் தயவாலும், இரக்கத்தாலும், அன்பாலும் இந்த உலகத்தை பிரகாசமாக்குங்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Salt And Light

இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை பாதையில் நாம் எப்படி உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க முடியும் என்பதை இந்த வேதப்பாடம் மூலமாக கற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய டியர்பண்ட் (Tearfund) க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.tearfund.org/yv க்கு செல்லவும்