உப்பும் வெளிச்சமும்மாதிரி

Salt And Light

5 ல் 1 நாள்

இயேசு கிறிஸ்து சபையை உப்புக்கும் வெளிச்சத்திற்கும் ஒப்பிட்டு பேசுகிறார். இந்த இரண்டுமே ஒரு சராசரி மனுஷனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்த இரண்டுமே இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

“கிரியைகளில்லாத விசுவாசம் என்பது உங்களால் பாட முடியாத ஒரு பாடல் போன்றது.” என்று பிரபல பாடலாசிரியரும் பாடகருமான ரிச் முல்லின்ஸ் ஒருமுறை கூறினார்.

நம்முடைய மனித சமுதாயம் ஜீவனை பெற்று அனுபவிப்பதில் முக்கிய பங்காற்றும்படியாகவே இயேசு சபையை அழைத்திருக்கிறார். இந்த அழைப்பை நிறைவேற்றுவதற்கு சபையானது தனித்தன்மையுடன் நடந்துகொள்வது அவசியம். 

உதவுவது வருத்தும் போது என்ற புத்தகத்தில், எழுத்தாளர் பிரையன் பிக்கேர்ட், “நமது சமுதாயம் கிறிஸ்துவுக்குள் மறுரூபம் அடைவது, ஸ்தல சபையின் ஈடுபாடு இல்லாமலும், நம்வசம் ஒப்புவிக்கப்பட்ட சுவிசேஷத்தை வாயின் வார்த்தையினால் ஜனங்களுக்கு அறிவியாமலும், சாத்தியம் அல்ல.” என்று குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் சபையானது தனது அழைப்பை உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அறிந்து கொள்கிறோம். தேவனுடைய ஈவுகளை சக மனிதர்களிடம் கொண்டு சேர்ப்பதே சபையின் நோக்கமாக இயேசு கற்றுக்கொடுத்திருக்கிறார். இவ்வழியின்றி உண்மை வாழ்விற்கு வேறே வழி இல்லை.

இந்த உலகை இருளும் அந்தகாரமும் மூடும்பொழுது, நாம் எப்படி தொடர்ந்து பிரகாசிக்க முடியும்? தொடர்ந்து எப்படி சுவையூட்ட முடியும்?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Salt And Light

இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை பாதையில் நாம் எப்படி உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க முடியும் என்பதை இந்த வேதப்பாடம் மூலமாக கற்றுக்கொள்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய டியர்பண்ட் (Tearfund) க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.tearfund.org/yv க்கு செல்லவும்