உப்பும் வெளிச்சமும்மாதிரி
பண்டைய காலங்களில், உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. உப்பில் மருத்துவ குணங்கள் இருப்பதால் அதை காயங்களை சுத்தப்படுத்துவதற்கு உகந்த கிருமிநாசினியாக பயன்படுத்தி வந்தனர். மாத்திரமல்ல, உணவு பொருட்களை கெட்டுபோகாமல் பாதுகாப்பதற்காகவும் பயன்படுத்திவந்தனர். இன்றும் வெப்பான பிரதேசங்களில் உணவு பொருட்கள் கெட்டுப்போகாதபடிக்கு, அவைகளை பதப்படுத்துவதற்கு உப்பை பயன்படுத்துகின்றனர்.
பரிசுத்த வேதாகமத்தில், சீஷர்களிடம் இயேசு சாரமற்று போகிற உப்பை குறித்து சொல்லி எச்சரிப்பதை நம்மால் காண முடியும். அந்த நாட்களில், உப்புக்கடல் என்று அழைக்கப்படும் சாக்கடலின் கரைகளில் இருந்தே உப்பை தோண்டி எடுத்து சுத்திகரித்து பயன்படுத்திவந்தனர். சுத்தமில்லாத உப்பானது, உப்பை போல வெண்மையாக தோற்றமளித்தாலும், அதில் உப்பின் சுவையு தன்மையும் இருக்காது. காலம் செல்ல செல்ல சுத்தமான உப்பானது கரைந்துவிடும். சுத்தமில்லாத எதற்கும் பிரயோஜனமில்லாத வெள்ளை துணுக்குகள் அடியில் தங்கிவிடும். அவைகளை கொண்டு போய் வெளியே கொட்டிவிடுவார்கள்.
உப்பை போல வெள்ளை துணுக்குகளாக தோற்றமளித்தாலும், உப்பிற்குரிய எந்த சுவையும் தன்மையும் இல்லாமல் இருப்பது எத்தனை பெரிய எமாற்றம்! இதனால் தான், சாரமுள்ள உப்பாக இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து, மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். சாரமுள்ள உப்பாக இருப்பதென்பது நாம் இயேசுவோடு கூட நெருக்கமான உறவில் இருப்பதையும், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவதையும் குறிக்கிறது.
இந்த உலகத்தின் வாழ்வியல் கலாச்சாரங்களில் சுவையூட்டவும், பாவத்தையும் அதின் விளைவுகளையும் இந்த உலகம் மேற்கொண்டு எழும்புவதிலும், இந்த உலகத்தை நாம் வாழுவதற்கு உகந்த இடமாக மேம்படுத்துவதிலும் பங்களிக்கும்படியாகவே கர்த்தர் சபையை அழைத்திருக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்து சபையை இந்தப் பூமிக்கு உப்பாய் இருக்கும்படியாகவும், இந்த உலகத்திற்கு வெளிச்சமாய் இருக்கும்படியாகவும் அழைத்திருக்கிறார். நிறைவான வாழ்க்கை வாழ இந்த இரண்டு காரியங்களும் மிகவும் அவசியமானவை. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்க்கை பாதையில் நாம் எப்படி உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்க முடியும் என்பதை இந்த வேதப்பாடம் மூலமாக கற்றுக்கொள்வோம்.
More