தெய்வீக திசைமாதிரி

Divine Direction

7 ல் 6 நாள்

இணையுங்கள்

நான், ​​தேவாலயத்தில் சேவை செய்வதற்க்காக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு தேவாலயமாக சேவை செய்வதற்கும் நான் உருவாக்கப்பட்டேன் என்று உணர்ந்தபோது, மக்களுடன் இணைவது மிக முக்கியமானது என்பதை அறிந்துக்கொண்டேன். இணையாமல் நீங்கள் சேவை செய்ய முடியாது. நீங்கள் யாருடன் இணைக்கிறீர்கள் என்பது நாளை நீங்கள் சொல்லும் கதைகளை மாற்றும். இது வரலாறு முழுவதும் உண்மை. புதிய ஏற்பாட்டின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் எழுதிய மனிதரான அப்போஸ்தலயாகிய பவுலைக் கவனியுங்கள்.

பவுல் எப்போதும் ஒரு கிறிஸ்தவர் அல்ல. அவர் இயேசுவைப் பின்பற்றுபவராக இருப்பதற்கு முன்பு, அவர் தர்சஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த சவுல், கோபமுள்ள மனிதன், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி கொன்றான். நீங்களும் இதுபோல் இயேசுவின் குழுக்களை விரும்பவில்லை என்றால், நீங்கள் சவுலை நேசித்திருப்பீர்கள். ஆனால், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று நம்புபவர்களின் உயிரைப் பறித்தபின், பவுல் அவர்களில் ஒருவரானார்.

அவருடைய மாற்றம் மிகவும் பெரியது, மிகவும் தீவிரமானது, வாழ்க்கையை மாற்றியமைத்தது, சவுல் (பவுல் என்று பெயர் மாற்றப்பட்டார்) உடனடியாக இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல விரும்பினார்.
பிரச்சனை என்னவென்றால், எந்த கிறிஸ்தவர்களும் அவரை நம்பவில்லை, அதுவும் வெளிப்படையான காரணங்களுக்காக.

அப்போஸ்தல நடபடிகள் இதை எளிமையாகக் கூறுகிறது:[Saul] சவுல் எருசலேமுக்கு வந்தபோது, ​​அவர் சீடர்களுடன் சேர முயன்றார், ஆனால் அவர்கள் அனைவரும் அவரைப் பார்த்து பயந்தார்கள், அவர் உண்மையில் ஒரு சீடர் என்று நம்பவில்லை.அப்போஸ்தலர் 9:26 சீடர்களின் சந்தேகம் குறித்து நீங்கள் அவர்களைக் குறை கூற முடியாது. கடந்த மாதம் கிறிஸ்தவர்களைக் கொன்ற மனிதன் எனது வேதாகம படிப்புக்கு என்னை வழிநடத்த நான் விரும்பாமாட்டேன்! நீங்கள் விரும்புவீர்களா?

பவுலுக்கு ஒரு சிக்கல் இருந்தது. மற்ற கிறிஸ்தவர்களுடன் அவருக்கு நம்பகத்தன்மை இல்லை. ஆகவே, பவுல் தன்னுடைய புதிய ஆர்வத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கும் எவரையும் அணுகினார். இணைவதற்கான பவுலின் முடிவு அவரது கதையை மாற்றவில்லை; அது வரலாற்றை மாற்றியது. பவுல் தனது விதியின் போக்கை மாற்றுவதில் இருந்து ஒரு படி அல்லது நண்பரைப் போல தூரமாக இருந்ததை நீங்கள் காண்கிறீர்கள். அந்த நண்பர் பர்னபாஸ் என்ற மனிதர்.

உங்கள் கதையை மாற்றுவதில் இருந்து நீங்கள் கூட இவ்வாறு ஒரு நட்புக்கு தூரமாக இருக்கலாம்.

பவுல் தனது முந்தைய வாழ்க்கையில் கொலை செய்ய முயன்ற மக்களின் தலைவர்களாக இருந்த அப்போஸ்தலர்களிடம் பர்னபாஸால் அழைத்துச் செல்லப்பட்டு அபாயப்படுத்தப்பட்டார் என்பதைப் பற்றி இன்று நீங்கள் படிப்பீர்கள். என்ன நடந்தது? பவுலின் புதிய நண்பர் பர்னபாஸ் பவுல் மீது தனது நற்பெயரைப் ஈடாக வைத்தார். பர்னபாவின் காரணமாக, மற்ற சீஷர்கள் பவுலுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். மீதி வரலாறு. உங்கள் கதையை மாற்றுவதில் இருந்து நீங்களும் இதுபோல் ஒரு நட்பு தூரமாக இருக்கலாம்.

சிறந்த திருமணத்திலிருந்து நீங்கள் ஒரு நண்பர் தூரமாக இருக்கலாம். ஒரு போதை பழக்கத்தை சமாளிப்பதில் இருந்து நீங்கள் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தூரத்தில் இருக்கலாம். சிறந்த வடிவத்தை பெறுவதில் இருந்து நீங்கள் ஒரு உரையாடல் தூரத்தில் இருக்கலாம். உங்கள் பரிசுகளைப் புரிந்துகொண்டு சிறந்த தலைவராவதற்கு நீங்கள் ஒரு வழிகாட்டியின் தூரத்தில் இருக்கலாம்.

உங்களையே கேட்டுகொள்ளுங்கள்: சரியான நபர்களுடன் இணைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் எனது இணைப்பை துண்டிக்க யாராவது இருக்கிறார்களா?

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Direction

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://craiggroeschel.com க்கு செல்லவும்