தெய்வீக திசைமாதிரி

Divine Direction

7 ல் 4 நாள்

செல்

உங்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதாவது நடப்பதை நீங்கள் உணர்கிறீர்களா? உங்கள் வாழ்க்கைக்கு வேறு ஏதாவது வேண்டுமா? நீங்கள் இப்போது அதை உணராவிட்டாலும், உங்கள் இதயத்தை மாற்றத்திற்குத் தயாராக வைத்திருப்பது எப்போதும் நல்லது, ஏனெனில் இது ஒரு உத்தரவாதம்.

நாம் ஏற்கனவே தொடக்கம் , நிறுத்தம் மற்றும் தரித்தல் பற்றி பேசினோம். சில நேரங்களில் தேவனின் திசையைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் எடுக்கக்கூடிய சிறந்த முடிவு செல்வது .

அழுத்தம் அதிகரிக்கும் போது பெரும்பாலும் அதே நிலத்தில் நிற்க அழைக்கப்படுகிறோம், ஆனால் பல முறை நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். நீங்கள் இருக்கும் இடத்தில் அமைதியற்றவராக உணர்கிறீர்களா? ஏதோ ஆச்சரியமான விதத்தில் தேவனை சேவிக்க அவர் உங்களிடம் ஒரு தெய்வீக விருப்பத்தை நட்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட குழு, ஒரு யோசனை, சிக்கல் அல்லது ஒரு இடத்தை அவர் உங்களுக்கு காட்டியிருக்கலாம். ஒருவேளை அவர் உங்களை ஒரு இடத்தினை காட்டி அழைக்காலம். அதை பின்தொடர்ந்து செல்லுங்கள், அது உங்களை எங்கு அழைத்துச் செல்கிறது என்று பாருங்கள். சாகசத்தைத் தழுவுங்கள். விசுவாசத்தின் பாய்ச்சலுக்கான சிறந்த வழி, நல்ல ஓட்டத்தைத் தொடங்குவதாகும்.

பழைய ஏற்பாட்டில் ஆபிராம் மற்றும் சாராய் (பின்னர் ஆபிரகாம் மற்றும் சாராள் என மறுபெயரிடப்பட்டது) பற்றி ஒரு சிறந்த கதை உள்ளது, அது “செல்” என்பதை சரியாக விளக்குகிறது. ஆதியாகமம் 12 ல் தேவன் ஆபிராமுடன் பேசினார். அந்த நேரத்தில், ஆபிராம் ஆரான் என்ற ஊரில் வசித்து வந்தார், ஆனால் அவர் கல்தேயர்களின் ஊர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர். ஆபிராமின் சொந்த ஊரான ஊரில், மக்கள் நன்னார் என்ற பொய்யான நிலவு விக்கிரகத்தை வணங்கினர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஒரு உண்மையான தேவன் தன்னை ஆபிராமுக்கு வெளிப்படுத்தத் தேர்ந்தெடுத்தார். தேவன் ஆபிராமுக்கு மிகவும் எளிமையான மற்றும் நேரடி கட்டளையை வழங்கினார்: நீங்கள் அறிந்த எல்லாவற்றிலிருந்தும் விலகிச் செல்லுங்கள்."விட்டு செல்லுங்கள்உன் தேசத்தையும், உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டுபோநான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு".ஆதியாகமம் 12: 1இல், இதை வலியுறுத்துகிறது

விட்டுப்போ.

உங்களுக்காக நியமிக்கப்பட்டிருப்பத்தை நோக்கி செல்ல, நீங்கள் உங்கள் பாதுகாப்பிலிருந்து வெளியே வர வேண்டியிருக்கும்.

வேறு எங்காவது செல்ல, நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும். நீங்கள் அறிந்தவை, வசதியானவை, கணிக்கக்கூடியவை மற்றும் எளிதானவற்றை விட்டுவிட வேண்டும். உங்கள் விதியை நோக்கி செல்ல, நீங்கள் உங்கள் பாதுகாப்பிலிருந்து வெளியே வர வேண்டியிருக்கும்.

நீங்கள் தேவனை உங்கள் வாழ்க்கையில் அனுமதித்தால் அவர் உங்கள் கதையை எங்கு அமைப்பார் என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாள், பல வருடங்கள் கழித்து, நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து, முழு கதையையும் பார்ப்பீர்கள். அது என்னவாக இருக்கும்? "தேவன் என்னை அழைப்பதைப் போல உணர்ந்தேன், ஆனால் நான் பயந்தேன், அதனால் நான் ஒன்றும் செய்யவில்லை." என்றா அல்லது உங்களிடம் மற்றவர்களுக்கு சொல்ல விசுவாசம் நிறைந்த சாகசம் உள்ள கதை இருக்குமா? “போ” என்று தேவன் சொல்லும்போது நீங்கள் போகிறீர்களா இல்லையா என்பதுதான் வித்தியாசம்.

கேளுங்கள்: தேவன் என்னை எதிலிருந்து வெளியேற என்ன அழைக்கிறார்? அவர் என்னை எங்கே செல்ல அழைக்கிறார்?

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Direction

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://craiggroeschel.com க்கு செல்லவும்