தெய்வீக திசைமாதிரி
ஆரம்பி
தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தெய்வீக அடிப்படை கொள்கைகளை கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க உதவும்படி எனது தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளை ஒரு வாரத்தில் ஆராய்வோம்.
யாராவது உங்களது வாழ்க்கை கதையை கூறச் சொன்னால் என்ன சொல்வீர்கள்?
நீங்கள் எங்கு பிறந்தீர்கள், எப்படி வளர்ந்தீர்கள் என்று நீங்கள் தொடங்கலாம். உங்கள் முதல் காதலை நீங்கள் குறிப்பிடலாம். ஒருவேளை நீங்கள் கல்லூரிக்கு உங்கள் குடும்பத்தை விட்டு போன போது செய்த பெரிய நடவடிக்கை பற்றிப் பேசலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியை எவ்வாறு சந்தித்தீர்கள் என்பதை விவரிக்கலாம். திருமணமாகவில்லை என்றால், அதற்கான காரணத்தை நீங்கள் விவரிக்கலாம். நீங்கள் பெற்றோராக இருந்தால், உங்கள் அலைபேசியில் சில புகைப்படங்களை உருட்டி உங்கள் குடும்பத்தைக் காட்டலாம். அல்லது உங்கள் வேலையின் பாதையை விவரிக்கலாம். உங்கள் கதையில் என்ன இருக்கிறது?
பெரும்பாலான நமக்கு யாருடனும் பகிர விருப்பமில்லாத அத்தியாயங்கள் உண்டு. ஒருவேளை நீங்கள் ஒருபோதும் விரும்பாத எங்கோ சென்றடைந்துவிட்டீர்கள். நீங்கள் அதை ஊதி கெடுக்க நினைக்கவில்லை, ஆனால் நீங்கள் எடுத்த முடிவுகளை நீங்கள் செல்ல நினைத்ததை விட அதிக தூரம் கொண்டு சென்று விட்டன. நீங்கள் நினைத்ததை விட அதிக செலவு செய்ய வேண்டிய சில விஷயங்களை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் மக்களை காயப்படுத்தினீர்கள். உங்கள் மதிப்புகளை சமரசம் செய்தீர்கள். வாக்குறுதிகளை மீறிவிட்டீர்கள். நீங்கள் செய்த விஷயங்களை மாற்ற முடியாதபோன்று உணருகிறீர்கள்.
உங்கள் கதை முடிவடையவில்லை. நீங்கள் ஒரு நாள் சொல்லப்போகிற கதையை மாற்றியமைக்க அதிக தாமதமாகி விடவில்லை.
ஒரு நல்ல செய்தி இருக்கிறது: உங்கள் கதை முடிந்துவிடவில்லை. நீங்கள் ஒரு நாள் சொல்லப்போகிற கதையை மாற்றியமைக்க அதிக தாமதமாகி விடவில்லை. நீங்கள் என்ன செய்தீர்களோ (அல்லது செய்யவில்லையோ) உங்கள் எதிர்காலம் இன்னும் எழுதப்படவில்லை. உங்களிடம் இன்னும் பெற வேண்டிய வெற்றிகள், இன்னும் சந்திக்க வேண்டிய நண்பர்கள், மேலும், மாற்றியமைக்க வேண்டிய தேவைகள், கர்த்தரின் நற்குணத்தை அனுபவிக்க வேண்டியது எல்லாம் உள்ளன. இதுவரை நடந்தவை உங்களுக்கு பிரியமோ இல்லையோ இனி கர்த்தரின் உதவியால் மற்றவர்களுக்கு நீங்கள் பெருமையுடன் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதையாக மாற்ற முடியும்.
உங்கள் கதையை மாற்ற ஒரு வழி இங்கே:தொடங்குபுதிய ஏதாவது.
எப்படி நிலையற்ற தன்மை, பயம், அல்லது சிக்கி இருப்பது போன்ற நிலையில் நீங்கள் இப்போது உணர்ந்தாலும் இன்று உங்கள் கதை தொடர்கிறது.இன்று நீங்கள் என்ன தொடங்குவீர்கள்? உங்கள் மனைவியுடன் தினமும் ஜெபித்தலா? ஒரு YouVersion வேதாகம திட்டத்தை ஒவ்வொரு நாளும் வாசித்தலா? தீர்க்கப்படாத சிக்கலைக் கையாள ஆலோசனைக்குச் செல்வதா? அதிக பெருந்தன்மையோடு வாழுவதா? உங்கள் தேவாலயத்தில் அல்லது உங்கள் சமூகத்தில் சேவை செய்வதா? இப்போதே அதைக் குறித்து வைக்க நல்ல நேரம். உங்கள் குறிப்புகளைத் திறந்து உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்க. இதை அதிக மறுபரிசீலனை செய்ய வேண்டாம். ஆனால் அதை காகிதத்தில் எழுத சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஒரு வாக்கியம் அல்லது இரண்டு போதும்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் சொல்ல விரும்பும் வாழ்க்கைக் கதையின் திசையில் செல்ல நான் என்ன செய்யத் தொடங்க வேண்டும்?
மேலும் என் புத்தகம் தெய்வீக திசை பற்றி அறிய:
இந்த வேதாகம திட்டம் தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஜோன்டர்வான் அனுமதியோடு உள்ளடக்கத்தை சுருக்கி வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தைப் பற்றி
தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.
More