தெய்வீக திசைமாதிரி

Divine Direction

7 ல் 2 நாள்

நிறுத்துதல்

நீங்கள் ஒரு உந்துதலையோ அல்லது அதிக சவால் நிறைந்த ஒன்றில் குழப்பத்தையோ உணரும்போது நீங்கள் எடுக்கும் ஒரு சிறந்த முடிவு அதை நிறுத்துவது. நேர இடைவேளை எடுங்கள். வழிகாட்டுதலுக்காக ஜெபித்திடுங்கள். அது இருந்தாலும் தூங்குங்கள்.  நீங்கள் நம்பும் ஒருவரிடம் இருந்து கடவுளின் ஞானத்தை பெற்றிடுங்கள் மேலும் சாத்தியமான விளைவுகளைக் குறித்து சிந்தித்திடுங்கள். பின்பு, "இது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்றா?" என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

நம்மில் பெரும்பாலானோர் நாம் செய்யும் காரியங்களுக்கு நல்ல எண்ணங்கள் அல்லது குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வகையான நியாயப்படுத்துதலை கொண்டிருப்போம். ஆனாலும் நம்மில் பலர் நாம் செல்ல வேண்டிய திசையிலிருந்து நாம் தொலைவில் இருப்பதை காணும்போது ஆச்சரியமடைகிறோம். நம் வாழ்வின் மாற்றங்கள் - அது நேர்மறையானதோ இல்லை எதிர்மறையானதோ - அவை முடிவில்லாத டொமினோக்கள் போல தொடர்ச்சியாக ஒன்றன் மீது ஒன்றாக விழும் முடிவுகளின்றி நடப்பது அரிது.

நிறுத்துவது என்பது எவ்வாறு ஒரு மிக உற்பத்திகரமான காரியம் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றும் எங்கே செல்ல வேண்டும் என்றும் அறிந்து கொள்ள நிற்பீர்கள் என்றால், அப்போது உங்கள் இலக்கை நோக்கி எவ்வாறு நகர வேண்டும் என்று உங்களால் முடிவுசெய்ய இயலும்.

நீங்கள் கடவுளின் தெய்வீக வழிகாட்டுதலை நெருங்கி நகர உங்களால் எதை நிறுத்தக்கூடும்?

நீங்கள் செல்ல வேண்டாத (அல்லது நீங்கள் செல்ல கூடாது என கடவுள் நினைக்கும்) திசையில் உங்களை வழிநடத்தும் எதையாவது செய்கிறீர்களா? நீங்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டியது எது? சமூக ஊடகம், மதுபானம், ஆபாசம், பிறர் ஒப்புதல்கள் அல்லது வேலை மீதான அடிமைத்தனமா? ஒரு ஆரோக்கியமற்ற உறவு? தீர்ப்புக்குள்ளாக்கும் மனநிலை? நீங்கள் கடவுளின் தெய்வீக வழிகாட்டுதலை நெருங்கி நகர உங்களால் எதை நிறுத்தக்கூடும்? ஒவ்வொரு தேர்வுகளையும் உங்கள் இலக்கை அடைவதற்கான அடுத்த படிக்கல்லாக நினைத்திடுங்கள்.

நம்முடைய ஒரு நடத்தையோ உறவோ நாம் சொல்ல நினைக்கும் கதையிலிருந்து நம்மை தூரமாக்கும் திசையில் நம்மை நடத்தும்போது, நாம் அதன் பின்விளைவுகளை கருத்தில் கொள்ள மட்டும் அல்லாது தவறான திசையில் பயணிப்பதை நிறுத்த தேர்வு செய்வதற்கும் நாம் இடைநிற்பது தேவையான ஒன்று. "மனந்திரும்புங்கள்" என்ற வார்த்தையை நீங்கள் கேவிப்பட்டிருப்பீர்கள். அதன் நிதர்சனமான ஒரு அர்த்தம் பின்திரும்புதல் என்பதாகும். நீங்கள் மனந்திரும்பும்போது, நீங்கள் ஒரு திசையில் செல்வதை நிறுத்திவிட்டு, கடவுளிடமும் அவருடைய உங்கள் பாதைக்கும் திரும்புவீர்கள்.

இப்படியாக, நிறுத்துதல் என்பது ஒரு புதிய வழியில் அடியெடுத்து வைப்பது என்ற அர்த்தம் கொள்கிறது. நீங்கள் பொறுப்புகள், மன்னித்தல், சரியான நண்பர்கள், அல்லது வாழ புதிய இடம் போன்றவற்றில் அடியெடுக்க தேவைகள் இருக்கலாம்.

உங்களையே கேளுங்கள்:

1. நான் கருத்தில் கொண்டுள்ள தேர்வை செய்தால், அது என்னை எங்கே கொண்டு செல்லும்?

2. நான் கடவுளின் தெய்வீக வழிகாட்டுதலை நெருங்கி நகர என்னால் எதை நிறுத்தக்கூடும்?

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Divine Direction

தினம்தோறும் நாம் வாழ்க்கையின் கதையை வடிவமைக்கும் முடிவுகளை தேர்ந்தெடுக்கிறோம். ஒருவேளை இப்படி தேர்ந்தெடுப்பதில் நீங்கள் தேறினவராகிவிட்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? நியூயார்க் டைம்ஸ் சிறந்த எழுத்தாளர் மற்றும் லைஃ.சர்ச் தலைமை போதகரான க்ரைக் குரோவ்ஷெல் எழுதின தெய்வீக திசை வேதாகம திட்டம், அவருடைய தெய்வீக திசை என்ற புத்தகத்திலிருந்து ஏழு அடிப்படை கொள்கைகளைக் கொண்டிருக்கிறது, அது நாம் தினந்தோறும் தேவ ஞானத்துடன் முடிவுகளை எடுக்க நமக்கு உதவி செய்து ஊக்கப்படுத்துகிறது. தேவன் மகிமைப் படும்படியான, மற்றும் மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதான ஒரு வாழ்க்கைக் கதை நீங்கள் வாழத் தேவையான ஆவியின் வழிகாட்டுதலை இத்திட்டத்தில் கண்டறிக.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://craiggroeschel.com க்கு செல்லவும்