ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்மாதிரி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

5 ல் 5 நாள்

உனக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை உண்டு!

ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் நெருங்குகையில், அந்த ஞாயிறன்று என்னென்ன வகை இறைச்சியை எந்த வகையில் சமைக்கலாம் சாப்பிடலாம் என்பதை பட்டியலிட்டு விவாதித்து முடிவெடுப்பதை நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் காணமுடியும். அதுவும் 40 நாள் இறைச்சி சாப்பிடாமல் இருந்திருந்தால்…இதனுடைய முக்கியத்துவமே தனி!

இது நம்மை ஒரு முக்கியமான கேள்விக்கு கொண்டு செல்கிறது: ஈஸ்டர் என்பது, வெறும் இனிப்பு, பலகாரம், இறைச்சியை உண்டு, புத்தாடைகளை அணிந்து கொண்டாடும் ஒரு பண்டிகையா? நிச்சயமாக இல்லை, என்பதே இதற்கு பதில்.

ஈஸ்டர், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மட்டுமின்றி அவர் மரணத்தையும் அதன் சகல வல்லமையையும் வென்றார் என்பதை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒரு பண்டிகை.

ஈஸ்டர், அல்லது உயிர்த்தெழுதல் நாள் என்பது சுவிசேஷத்தின் ஒரு முக்கியமான அங்கம் : “கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்”! (வேதாகமம், ரோமர் 8:34)

முதன்முதலான ஈஸ்டர், அதாவது பஸ்கா பண்டிகை, பழைய ஏற்பாட்டின் உபாகமம் 16 : 1 மற்றும் 3ல் குறிப்பிடப்பட்டுள்ளது : 'ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப் மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி [...]

இஸ்ரவேலின் தேவன் தம் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த நாளை பஸ்கா பண்டிகை நினைவு கூறுகிறது. ஆண்டவரின் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறினர். இறுதியாக! விடுதலை....400 வருட அடிமைத்தனத்திற்கு பிறகு.

இதுபோல, இயேசுவே நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி ஆனார்… அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாக நம்மை வெகுவாக அழுத்துகின்றன பாவத்திலிருந்தும் பாவத்தின் வல்லமையில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். அவருடைய தியாகமானது நம் அடிமைத்தனத்தின் இடமான “எகிப்தை விட்டு வெளியேற” நம்மை அனுமதிக்கிறது. ஆண்டவரின் பிள்ளைகளாக மாறிய அனைவருக்கும் என்ன ஒரு விடுதலை!

ஈஸ்டர் பண்டிகை, நாம் உண்ணும் உணவுகளின் கொண்டாட்டத்திற்கு அப்பாற்பட்டது… இது ஆண்டவருடைய வெற்றியின் கொண்டாட்டம், அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்தின் மூலம் நாம் பெறும் விடுதலை மற்றும் மீட்பின் கொண்டாட்டம்! இந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் இன்று நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வோம்!!

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=easter2023