ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்மாதிரி
ஆண்டவர் தனது இறுதி வார்த்தையை சொல்லவில்லை...
நாம் ஈஸ்டர் காலத்தின் மத்தியில் இருப்பதால், சிலுவையில் நம் மீட்பர் நம்மீது கொண்ட அன்பினால் சகித்த அனைத்தையும் நினைவில் கொள்வது நல்லது... மட்டுமின்றி அவரது உயிர்த்தெழுதலையும் நினைவில் கொள்வதும் நல்லது! "ரிசன்" (Risen) என்ற பெயரைக் கொண்ட ஒரு திரைப்படம் என் நினைவிற்கு வருகிறது.
இந்த படம் மேசியா மர்மமாக மறைந்து போனதை விசாரிக்கும் ரோமானிய நீதிமன்றத்தின் கதையைச் சொல்கிறது. கல்லறை காலியாக உள்ளது, ஆதலால் ரோம அதிகாரி விளக்கங்களைத் தேடி செல்கிறார். கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் அறிவித்த உயிர்த்தெழுதலை ரோமர்கள் நம்ப மறுத்து அவரது உடல் திருடப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள். உங்களால் இந்த திரைப்படத்தை காண இயன்றால் அது எப்படி முடிவடைகிறது என்று நீங்கள் பார்க்கலாம்.
இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நான் சீடர்களுடன் இருப்பதுபோல் என்னை கற்பனை செய்துகொண்டேன். அனுபவிக்க வேண்டிய அசாதாரண தருணங்கள்! நான் அங்கு இருந்திருக்க விரும்புகிறேன்…
இந்த ஈஸ்டர் வாரத்தில், இயேசு இங்கே இருக்கிறார், இன்றும் உயிருடன், கிரியைகளை செய்பவராய் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்வதை விட சிறந்தது என்ன! நமது இரட்சகர் கல்லறையில் இருந்தபோது, எல்லாம் முடிந்துவிட்டதாகத் தோன்றியபோது, ஆண்டவர் தம்முடைய இறுதி வார்த்தையை இன்னும் சொல்லவில்லை.
இயேசு ஒருவரால் மட்டுமே வாழ்க்கையை மறுரூபமாக்க இயலும்... ஏனென்றால் “...அவர் அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார்..." (1 கொரிந்தியர் 15:4 பார்க்கவும்) அவர் உங்களை அழைத்துச் செல்கிறார்:
- வேதனையிலிருந்து சமாதானத்திற்கு
- போதையிலிருந்து சுதந்திரத்திற்கு
- நிராகரிப்பிலிருந்து அன்பிற்கு
- மனச்சோர்விலிருந்து வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு
- இருளிலிருந்து வெளிச்சத்திற்கு.
உயிர்த்தெழுதலின் அற்புதத்தின் வழியாக உன்னையும் மாற்ற இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன் உடலை குணப்படுத்தட்டும், உன் ஆன்மாவை மீட்டெடுக்கட்டும், உன் மனதையும் சிந்தனையையும் புதுப்பிக்கட்டும். அவர் உன்னை நேசிக்கிறார்!
இந்த நாள் இனிதாகட்டும்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=easter2023