ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்மாதிரி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

5 ல் 3 நாள்

உன் ஜெபங்கள் அனைத்தும் கேட்கப்படுகின்றன!

இயேசு உன் மீதுள்ள அன்பினால் சிலுவைப் பாதையை தேர்ந்தெடுத்தார் என்பதை நேற்று உனக்கு நினைவூட்டினேன்... நாம் பூமியில் வாழும்வரை, நம் இரட்சகர் அனுபவித்த சில துன்பங்களை நாம் கடந்து செல்ல நேரிடலாம்... அவரின் மீது விசுவாசத்தோடு ஒப்புக்கொடுத்து நாம் ஜெபங்களை எழுப்பினாலும், சில சமயங்களில் அது கேட்கப்பட்டதுபோல் தெரிவதில்லை…

கடலில் வீசப்பட்ட செய்தித் துண்டு அடங்கிய ஒரு பாட்டிலைப் பற்றி இது என்னை சிந்திக்க வைக்கிறது... நல்ல எண்ணம் கொண்ட ஒருவரின் கைகளில் அது கிடைப்பதற்கு முன், எவ்வளவு நேரம் எடுக்கும், எத்தனை மைல்கள் அது பயணிக்க வேண்டும்?

நீ இப்படியாக "கடலில் ஒப்படைத்த" பாட்டில்கள் என்னென்ன? எவ்வளவு காலத்திற்கு முன்?

உன்னுடையது ஒருவேளை கணவனுக்காக (மனைவிக்காக) அல்லது நீண்ட நாட்களாக நீ காத்திருக்கும் குழந்தை பாக்கியத்திற்காகவா? அல்லது குணப்படுத்த முடியாதது என்று சொல்லப்படும் நோய் குணமாகவா? வாழ்க்கை முறை மாற்றம் (lifestyle change) அல்லது வருவதற்கு தாமதமாக தோன்றும் வாழ்க்கைப் பயண திசை மாற்றமா? மிதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்டவர்களை ஆசீர்வதிக்க நீ தயார் செய்ய நினைத்த ஒரு திட்டமா?

நீ ஆண்டவருக்கு எந்த "செய்திகளை" அனுப்பினாலும், எதுவும் தொலைந்து போகாது. அது அனைத்தும் அதனுடைய இலக்கை அடையும்!

  • உன் ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்கிறார். (நீதிமொழிகள் 15:29 பார்க்கவும்)
  • அவர் உன் வேண்டுகோள்களுக்கு செவிகொடுக்கிறார். (சங்கீதம் 116:1-2 பார்க்கவும்)
  • அவர் தனது இதயத்தை உன் பக்கம் சாய்க்கிறார். (சங்கீதம் 40:2 பார்க்கவும்)
  • உன் துன்பத்தால் அவர் சலனமடைகிறார். (சங்கீதம் 18:7 பார்க்கவும்)
  • உன் கண்ணீர் அவரை தொடுகிறது. (சங்கீதம் 6:8 பார்க்கவும்)

ஆம், ஜெபிப்பது என்பது நித்தியத்திற்குள் வார்த்தைகளை விதைக்கும் ஒரு ஆசீர்வாதம்! எல்லாவற்றையும் அறிந்து புரிந்துகொள்பவரிடம், உன்னை துவண்டுபோகச் செய்யும் விஷயங்களைப் பற்றி, உன்னை வருந்தவைப்பவற்றைப் பற்றி, உன்னை கவலையடையச் செய்பவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ள உதவும் பரிசும் இதுவே. நீ ஆண்டவரிடம் உன் இதயத்தைத் திறக்கும்போது, அவருடைய ஆவியின் மூலம் உன் இதயத்தில் அவர் சுவாசிக்க நீ அனுமதிக்கிறாய்.

பயம், தயக்கமில்லால், ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம் பேச நான் உன்னை ஊக்குவிக்கிறேன், அவர் உனக்கு செவிகொடுக்கிறார் என்ற மன உறுதியுடன். அவர் உன் தந்தை, நீ கடந்து செல்லும் அனைத்தையும் அவர் கவனிக்கிறார்!

ஜெபத்தில் நிறைவடைவோம்…“ஆண்டவரே, சில சமயங்களில் நேரம் நீண்டதாகத் தோன்றுகிறது, மேலும் நீர் என் ஜெபங்களை கேட்கிறீரோ இல்லையோ என்று நான் சந்தேகிக்க ஆரம்பிக்கிறேன். என்னை மன்னித்து, பொறுமையுடனும் விசுவாசத்துடனும் இருக்க எனக்குக் கற்றுத்தாரும். நீர் ஒருபோதும் கால தாமதமாகவோ முன்கூட்டியோ வரமாட்டீர் ஆனால் எனக்குப் பதிலளிக்க எப்போதும் சரியான நேரத்தில் வருவீர் என்று எனக்குத் தெரியும். உம் அன்பிற்கும் கிருபைக்கும் நன்றி. உம் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."

ஜெபத்தில் விடாமுயற்சியுடன் இரு. உன் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆண்டவரிடம் தீர்வு உண்டு!

இனிய நாள், எப்போதும் உன் இரட்சகருடன் இணைந்திரு!

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=easter2023