ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்மாதிரி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

5 ல் 2 நாள்

இயேசு தம் கரங்களை உனக்காக திறக்கிறார்

இயேசுவுடன் நமக்குள்ள அடையாளத்தை ஈஸ்டர் நமக்கு நினைவூட்டுகிறது. நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அவர் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை அவருடைய மரணமும் உயிர்த்தெழுதலும் நமக்கு காட்டுகிறது. வேதாகமத்திலுள்ள இந்த பகுதி நமக்கு நினைவூட்டுவது போல, அவர் நமக்காக எல்லாவற்றையும் தாங்கினார்:

"...அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." (ஏசாயா 53:2-4 பார்க்கவும்)

உன்னை இப்போது துன்பப்படுத்துவது என்ன? அவமானம், நிராகரிப்பு, ஏளனம், தனிமை, உடல் மற்றும்/அல்லது மனதில் வலியா?

இயேசு சிலுவையில் பயங்கரமான துன்பங்களை அனுபவித்ததன் மூலமாக, உன்னால் என்ன சகிக்க முடியும் என்பதை இயேசு நன்கு புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்:

  • அற்புதங்களைச் செய்த அவர், நிராகரிக்கப்பட்டார், வெறுக்கப்பட்டார்.
  • அவர் குற்றமற்ற பரிசுத்தராக இருந்தபோதிலும், அவர் கடவுளால் தாக்கப்பட்டார், துன்பப்பட்டார்.
  • தேவனுடைய குமாரனான அவர், அவமானப்படுத்தப்பட்டார், துப்பப்பட்டார்.
  • எந்தத் தவறும் செய்யாத அவர், அறையப்பட்டார், சாட்டையால் அடிக்கப்பட்டார்.
  • அவர் கேலி செய்யப்பட்டு, அவமதிக்கப்பட்டபோதிலும், தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளவில்லை.
  • அவர் நேசிப்பவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியாக இருந்தார்.
  • அவர் அனைவராலும் கைவிடப்பட்டு இருந்தார்.

ஆம், கொல்கொதா என்ற மலையில், இயேசு எல்லாவற்றையும் தாங்கினார். சிலுவையில் மரணம் வரும் வரையிலும் அவர் கீழ்ப்படிந்தார். (பிலிப்பியர் 2:8 ஐப் பார்க்கவும்) இன்றும் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படவும், நம் நோய்களிலிருந்து குணமடையவும், பிதாவுடன் ஒப்புரவாகவும் அவருடைய தியாகம் தான் நமக்கு சாத்தியமாக்குகிறது. ஏசாயா 53:5 கூறுகிறது, “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."

இயேசுவின் துன்பம் மற்றும் சிலுவையுடன் நமக்கிருக்கும் ஒற்றுமைகளை கண்டுகொள்வது, சில சமயங்களில் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் கடினமான ஒரு பாதையாக இருக்கலாம். ஆனால் அதுதான் வெற்றி மற்றும் உயிர்த்தெழுதலின் பாதை என்பதை மறந்துவிடாதீர்கள்... உன் வழியில் இனி நீ ஒருபோதும் தனிமையாக இருப்பதாக உணராதபடி இயேசு உன் இடத்தை எடுத்துக்கொண்டார்.

இன்று, உன்னை நேசிப்பதற்கும், உன்னை ஆறுதல்படுத்துவதற்கும், உன்னை பலப்படுத்துவதற்கும், உன்னை அமைதிப்படுத்துவதற்கும், உன்னை குணப்படுத்துவதற்கும் அவருடைய கரங்களைத் திறக்கிறார் என்பதை நினைவில் கொள்.

இந்த நாள் அவருடைய சமாதானம் நிறைந்த அழகான நாளாக உனக்கு அமைய நான் வாழ்த்துகிறேன்: இயேசு எல்லாவற்றையும் நிறைவேற்றினார், அவர் உயிருடன் இருக்கிறார்!

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்

இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக tamil.jesus.netக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=easter2023