நடுவிலிருந்த சிலுவையில் தொங்கிய மனிதன்- ஒரு 7-நாள் உயிர்த்தெழுதல் தியானம்மாதிரி
மறைவிலிருந்து
“யூத நகரமான அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பு என்ற ஒருவன் இருந்தான். அவன் சபை உறுப்பினர், நல்ல மற்றும் நேர்மையான மனிதன். அவன் அவர்களின் முடிவு மற்றும் செயலுக்கு சம்மதிக்கவில்லை; அவன் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடிக்கொண்டிருந்தான். இந்த மனிதன் பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்டான். லூக்கா 23:50-52 (TAOVBSI)
இரண்டு முக்கிய காரணங்களால், இயேசுவின் அடக்கம் எந்த வகையிலும் முன்கூட்டியே முடிவானது அல்ல. முதலாவதாக, குற்றவாளிகளின் சிலுவையில் அறையப்படுவது பெரும்பாலும் அவர்களின் அவமானத்தின் முடிவு அல்ல; அவர்கள் ஒரு முறையான அடக்கத்திற்கு தடை செய்யப்பட்டனர். இரண்டாவதாக, ஒரு சடலத்தை விடுவிப்பது, உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரும் உறவினர் அல்லது நண்பரை மட்டுமே சார்ந்துள்ளது - இயேசுவை அடக்கம் செய்ய யார் இருந்தனர்? சீடர்கள் ஓடிவிட்டார்கள், கூட்டம் கலைந்து விட்டது, பெண்கள் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கத் தயாராக இல்லை.
வரலாற்றின் இந்த தருணத்தில், ஒரு நபர் திடீரென அமைதியாக வெளிப்படுகிறார் - அவர் "இயேசுவின் சீடராக இருந்தார், ஆனால் யூதர்களுக்குப் பயந்து இரகசியமாக அப்படி இருந்தார்." (யோவான் 19:38).
இதுவரை அரிமத்தியாவைச் சேர்ந்த யோசேப்பை பயம் அமைதிப்படுத்தியது. இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் அவனை ஈர்த்தது மற்றும் விசுவாசத்தை காப்பாற்றுவதற்கு அவனை கொண்டு வந்தது, ஆனால் அவனுடைய விசுவாசம் இரகசியமாக இருந்தது. அவன் தனது ஆன்மீக கிரியையை இரகசியமாகச் செய்தார் - அதாவது, சிலுவை அவனை வெளியில் கொண்டு வரும் வரை. எனவே, நீண்ட நேரம் மறைவில் இருந்த பிறகு, யோசேப்பு "பிலாத்துவிடம் சென்று இயேசுவின் உடலைக் கேட்டான்."
இயேசுவின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி, "ஒரு கைத்தறி துணியால் போர்த்தி, கல்லில் வெட்டப்பட்ட கல்லறையில், இதுவரை யாரும் வைக்கப்படாத இடத்தில், இயேசுவின் உடலை யோசேப்பு கவனமாகக் கையாண்டதை சுவிசேஷம் விவரிக்கிறது. ” (லூக்கா 23:53). அடக்கம் செய்யும் பணியில் யோசேப்புக்கு உதவுவதற்காக, "முன்பு இரவில் இயேசுவிடம் வந்தவர் ... வெள்ளைப்போளும் கற்றாழையும் கலந்த கலவையைக் கொண்டு வந்த" நிக்கொதேமைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம் (யோவான் 19:39).
யோசேப்பின் சுருக்கமான மற்றும் தனித்த தோற்றம், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் வேலை செய்யும் கடவுளின் பாதுகாப்பை நமக்கு தெளிவாக நினைவூட்டுகிறது. இந்தக் கணத்திற்காகவே கடவுள் யோசேப்பைத் தயார்படுத்தினார். யோசேப்பு பயந்தவனாகவும் இரகசியமாகவும் இருந்தான், ஆனால் கடவுள் நம்மைப் போலவே அவனை நன்மைக்காகப் பயன்படுத்தினார். யோசேப்பு தனது ராஜாவுக்காக நிற்கும் பல வாய்ப்புகளை இழந்திருந்தான்; அவன் வெளிப்படையாக பேச வேண்டிய பல முறை அமைதியாக இருந்தான். ஆயினும்கூட, இந்த முக்கியமான பணிக்கு இந்த நாளில் அவனை கடவுள் உறுதி செய்தார். யோசேப்பு அதற்கு எழும்பினான், எல்லாவற்றையும் பணயம் வைத்து - அவனுடைய அந்தஸ்து, நற்பெயர் மற்றும் பாதுகாப்பு - இயேசுவுக்கு சரியாக அடக்கம் பண்ணப் படுவதை உறுதி செய்வதன் மூலம் அவரைக் கெளரவித்தான்.
நீங்கள் யோசேப்புடன் அடையாள படுத்திக் கொள்ளலாம்: நீங்கள் ஒரு இரகசிய சீடராக வாழ்ந்து வருகிறீர்கள், உங்கள் சுற்றுப்புறத்திலோ அல்லது பணியிடத்திலோ உங்கள் விசுவாசத்தைப் பற்றி யாருக்கும் தெரியப்படுத்த பயப்படுகிறீர்கள். அப்படியானால், இன்று, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பயத்தை மன்னித்து, சிலுவையின் வெளிச்சத்தில் யோசேப்பைப் போல, கிறிஸ்துவின் அன்பில் அவருக்காக தைரியமாக உங்கள் நிலைப்பாட்டை எடுக்க உதவ கேளுங்கள். உங்கள் ராஜாவுக்காக நிற்கும் வாய்ப்பை நீங்கள் கடந்த காலங்களில் தவறவிட்டிருக்கலாம், ஆனால் கடவுள் தம்முடைய மகனைக் கௌரவிக்கும் பணியை உங்களுக்கு வழங்க எப்போதும் தயாராக இருக்கிறார், அடுத்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட வேண்டியதில்லை.
- வித்தியாசமாக சிந்திக்க கடவுள் என்னை எப்படி அழைக்கிறார்?
- கடவுள் எப்படி என் இதயத்தின் ஏக்கங்களை—நான் விரும்புவதை—எதை மறுசீரமைக்கிறார்?
- இன்றைய நாளில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் என்னை அழைக்கிறார்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த உலகம் உடைந்துவிட்டது என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வு இருந்தால் என்ன செய்வது? இந்த ஏழு நாள் உயிர்த்தெழுதல் திட்டம் சிலுவையில் கள்ளனை தனித்துவமான அனுபவத்துடன் தொடங்கி ஒரு அப்பாவி மனிதனின் மரணதண்டனையில் எவ்வாறு உடைக்கப்படுவதின் பதில் கிடையது: தேவகுமாரன் இயேசுவால் என்று சொல்கிறது.
More