நடுவிலிருந்த சிலுவையில் தொங்கிய மனிதன்- ஒரு 7-நாள் உயிர்த்தெழுதல் தியானம்மாதிரி

The Man on the Middle Cross: A 7-Day Easter Reading Plan

7 ல் 1 நாள்

பரதீஸின் வாக்குறுதி

“அவன், 'இயேசுவே, நீர் உமது ராஜ்யத்திற்கு வரும்போது என்னை நினைவுகூரும்' என்று சொன்னான். மேலும் அவர் அவனிடம், 'மெய்யாகவே, நான் உனக்குச் சொல்கிறேன், இன்று நீ என்னோடு பரதீசிலிருப்பாய்.'” லூக்கா 23:42-43 (TAOVBSI)

இரண்டு குற்றவாளிகளுக்கு இடையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார் - அந்த குற்றவாளிகள் இருவரும் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டனர், ஆனால் அவர்கள் அதை மிகவும் வித்தியாசமாக விதங்களில் ஏற்றுக்கொண்டனர். முதலில் மரித்த கள்ளன் சிலுவையை ஒரு முரண்பாடாகக் கருதினான். இயேசு சிலுவையில் இருந்ததால், அவர் இரட்சகர் இல்லை என்ற முடிவுக்கு வந்தான். எனவே அவன் நடு சிலுவையில் இருந்த மனிதனைக் கேலி செய்தான்: “நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்!” (லூக்கா 23:39). ஆனால் இரண்டாவது மனிதன் சிலுவையை உறுதிப்படுத்தும் ஒன்றாகக் கண்டான். இயேசு சிலுவையில் இருந்ததால், அவர் இரட்சகராக இருக்க வேண்டும் என்பதை அவன் உணர்ந்தான்.

ஒரு காலத்தில் மிகவும் கொடூரமான இந்தக் குற்றவாளி, எந்தக் குற்றமும் செய்யாதவர் என்று முடிவெடுக்கும் அளவுக்கு இயேசுவை அவருடைய இறுதி மணிநேரங்களில் பார்த்தான், கேட்டான். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய நிலமை மிகவும் இக்கட்டானது மற்றும் அவன் முன்பு நினைத்ததை விட வித்தியாசமானது என்பதை உணரும்படி அவனது கண்களைத் திறந்தார். அவன் நியாயமான முறையில் தண்டிக்கப்பட்டான், அவனுடைய பாவங்களுக்குத் தகுதியான தண்டனையைப் பெற்றான், ஆனால் அவனுக்கு இயேசு அளித்த மன்னிப்பு இல்லாதிருந்தால் அவனது தண்டனை நித்திய காலமாமாக நீடித்திருக்கும்.

இந்த உணர்தலைத் தொடர்ந்து, தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் தான் தகுதியற்றவன் என்று அறிந்து இயேசுவிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள் விடுத்தான்: "இயேசுவே, நீர் உமது ராஜ்யத்திற்கு வரும்போது என்னை நினைவுகூரும்." அவன் முன்னிருந்த ஆதாரங்களை கொண்டு முடிவெடுத்தான், இந்த மனிதர் மேசியா என்றால், அவர் நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட ராஜா. அவர் அந்த ராஜாவாக இருந்தால், அவர் ஒரு ராஜ்யத்தைப் பெறப் போகிறார் - கடவுளின் நித்திய ராஜ்யம். அவர் தம்முடைய ராஜ்யத்தை அடையும்போது, ​​ஒருவேளை அவர் அங்கு வரும்போது என்னை நினைவுகூருவார்.

இயேசுவின் பதில் அற்புதமானது: "மெய்யாகவே நான் உனக்கு சொல்கிறேன், இன்று நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்." இந்த மனிதன்-இவனும் கூட-பரலோகத்திற்குச் செல்வான் என்று இயேசு வாக்குறுதி அளித்தது மட்டுமல்லாமல், இந்த இறக்கும் மனிதனுக்கு அந்த யதார்த்தத்தின் உடனடித் தன்மையை வலியுறுத்தினார்: "இன்று"! அவர்கள் கல்வாரியில் சிலுவைகளில் தொங்காமல், தேவனுடைய ராஜ்யத்தில் உட்கார்ந்து தங்கள் உரையாடலை முடிப்பதை நாம் கற்பனை செய்யலாம்.

இந்தக் குற்றவாளி எதுவும் கொடுக்கவில்லை, எல்லாவற்றையும் ராஜாவிடம் கேட்டான். அவர் ஆம் என்றார். இது நம்மை அசைத்து நமக்கு உறுதியளிக்கத் ஒருபோதும் தவறக்கூடாது, ஏனென்றால் நீங்களும் நானும் அந்தக் குற்றவாளியின் அதே நிலையில் தான் இருக்கிறோம். நம்முடைய செயல்கள் அவருடைய ராஜ்யத்திற்கு வழி திறக்கும் திறவுகோலாக இருந்தாலும், இயேசுவிடம் கொண்டு வர நம்மிடம் எதுவும் இல்லை. நாம் கொண்டு வருவதெல்லாம் குற்றவாளி கொண்டு வந்ததெல்லாம்: நம் பாவம். ஆனால் அதற்காகத்தான் இயேசு சிலுவையில் தொங்கினார்: நாம் நம்முடைய பாவத்தை அவரிடம் கொண்டு வரவும், அவர் அதை எடுத்துச் சுமக்கவும். அதனால்தான், இயேசு குற்றவாளிக்கு அளித்த வாக்குறுதி, மரிக்கப்போகும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் அவர் அளித்த வாக்குறுதியாகும்: "இன்று நீங்கள் என்னுடன் பரதீஸில் இருப்பீர்கள்." அந்த அறிவு இன்று உங்கள் மகிழ்ச்சியாகவும், உங்கள் துதிக்கு எரிபொருளாகவும் இருக்கட்டும். ஒரு நாள், நீங்கள்-நீங்களும் கூட-உங்கள் ராஜாவுடன் பரதீஸில் இருப்பீர்கள்.

  • வித்தியாசமாக சிந்திக்க கடவுள் என்னை எப்படி அழைக்கிறார்?
  • கடவுள் எப்படி என் இதயத்தின் ஏக்கங்களை—என்னுடைய விருப்பத்தை மறுசீரமைக்கிறார்?
  • இன்றைய நாளில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள்எதிர்பார்க்கிறார்?

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Man on the Middle Cross: A 7-Day Easter Reading Plan

இந்த உலகம் உடைந்துவிட்டது என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வு இருந்தால் என்ன செய்வது? இந்த ஏழு நாள் உயிர்த்தெழுதல் திட்டம் சிலுவையில் கள்ளனை தனித்துவமான அனுபவத்துடன் தொடங்கி ஒரு அப்பாவி மனிதனின் மரணதண்டனையில் எவ்வாறு உடைக்கப்படுவதின் பதில் கிடையது: தேவகுமாரன் இயேசுவால் என்று சொல்கிறது.

More

தி குட் புக் கம்பெனி, thegoodbook.com ஆல் வெளியிடப்பட்ட அலிஸ்டர் பெக்கின் தினசரி பக்தி நூலான 'ட்ரூத் ஃபார் லைஃப்' என்பதிலிருந்து பக்தி உள்ளடக்கம் எடுக்கப்பட்டது. ட்ரூத் ஃபார் லைஃப் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டது. பதிப்புரிமை (சி) 2022, தி குட் புக் கம்பெனி. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tfl.org/365