திட்ட விவரம்

நன்றி செலுத்தும் அறுவடை ஆண்டு முழுவதும்!மாதிரி

Harvest Thanksgiving All Year Round!

7 ல் 2 நாள்

உங்கள் உள்மனம் மகிழ்ந்து களிகூறுகிறதா?


"கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன்"சங்கீதம் 28:7

ஒரு விவசாயி தன் பயிர் வளர்வதற்குத் தேவையான மழை, வெய்யில் கிடைக்கும் எனும் நம்பிக்கையுடன் விதைப்பது போல, ஒரு ஆண்டவரைப் பின்பற்றும் கிறிஸ்தவ விசுவாசி, தேவன் தன்னை வழிநடத்துவார் என முழுமையாக நம்ப வேண்டும். இன்றைய வேத வசனம் நமது சக்தி எங்கிருந்து வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. அது கர்த்தரிடமிருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் சவால்களை மேற்கொள்ளும் வலிமையை அவரது மகிழ்ச்சி நிறைந்த பிரசன்னம் நமக்கு அளிக்கிறது.


நேற்றைய தியானத்தில், ஒரு பெண் தனது உள்ளான மகிழ்ச்சியினால் நிறைந்து, தனது குழந்தைகளோடு இணைந்து தேவனைத் துதித்ததில் அந்த ஆனந்தம் வெளிப்பட்டதை பார்த்தோம். ஒருவேளை கடன் தவனையை செலுத்த முடியாதநிலை அல்லது நமக்கு மிக நெருக்கமானவர் குணப்படுத்த இயலாத நோயினால் பாதிக்கப்படுதல், போன்ற கடினமான சூழல்களிலும் கூட, கர்த்தர் அவற்றைப் பார்த்துக் கொள்வார் எனும் ஆழமான நம்பிக்கையோடு நம்மால் தேவனைத் துதித்துப் பாட முடியுமா?


நமது உடலை வலிமையாக்க ஒவ்வொரு நாளும் பல முறை சத்தான உணவுகளை சாப்பிடுகிறோம், அது போல ஆவிக்குரிய உள்ளான மனுஷன் விசுவாசத்தில் ஆழ்ந்த வலிமையை பெறுவதற்கு, நமது ஆன்மா அனுதினமும் வேத வசனத்தினலும், இறைவேண்டுதலினாலும் போஷிப்பிக்கப் பட வேண்டும்

.

.ஐந்து வருடங்களுக்கு முன்பாக, ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, எனது கனவர் டேன் குணப்படுத்த இயலாத அளவிற்கு கேன்சரினல் பாதிக்கப்பட்டதை அறிந்தோம். இனி அந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கிடையாது. அது ஜூன் 22, 2017. கேன்சர் கிருமிகள் தொண்டை, உணவுக்குழாய், வயிற்றுப்பகுதியைக் கடந்து இதயம் வரை பரவிவிட்டது. எனது கணவரால் உண்ணவோ, பருகவோ, உணவை விழுங்கவோ இயலவில்லை. இரண்டு மாதங்கள் கடந்த பின்னர் அவர் இறைவனடி அடைந்தார். அந்தக் கடினமான காலத்தில், எனது கணவரால் உடல் வலிமை பெறும் ஆகாரங்களை உண்ணமுடியவில்லை, ஆனால் அந்த வேதணை மிகுந்தக் காலத்தைக் கடந்து செல்லத் தேவையான ஆவிக்குரிய வலிமையை அவர் சேமித்து வைத்திருந்தார்.


தூய ஆவியானவரல் அருளப்பட்ட பெலத்தினால், அவரால் நற்செய்திப் பாடல்கள் பாடவும், ஆராதிக்கவும், மருத்துவ சிகிச்சைகளை மகிழ்ச்சியோடு எடுக்கவும் முடிந்தது.


நாம் அவரை முழுமையாக நம்புகிறோம் அல்லது நமக்குப் போதுமான விசுவாசம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும் காலம் ஒன்று வாழ்க்கையில் நிச்சயம் வரும். ஒன்று அவரை சார்ந்திருப்போம் அல்லது விட்டு விலகி ஓடுவோம். இது கடினமான உண்மை. இன்றைய அநேக வெதுவெதுப்பான கிறிஸ்தவ விசுவாசிகள் நிலை இதுதான். ஒரு நாள் கிறிஸ்தவர், வாரத்தின் மீதம் ஆறு நாட்கள் எந்தவித ஆவிக்குரிய உணவும் கிடையாது. வெறும் பேச்சு, பேச்சு. நடக்கையில் எதுவும் கிடையாது.
எல்லா காரியங்களிலும் கர்த்தரை நம்ப வேண்டும் எனக் கற்றுக் கொண்டால்தான், நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் நம்மிலிருந்து வெளிப்படும்.


இன்றைய பயிற்சி


ஒவ்வொரு மணிநேரமும் நன்றி செலுத்துங்கள்


உள் மனதிலிருந்து கருத்தோடு பாடல்பாடி தேவனைத் துதியுங்கள்


இன்று உங்கள் உடலுக்கு உணவளித்தால், உங்கள் ஆன்மாவுக்கும் உணவு அவசியம் தேவை


ஒப்படைப்பு அல்லது ஓடிப்போவது. இரண்டில் ஒன்றை தேர்வு செய்


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Harvest Thanksgiving All Year Round!

பிற கலாச்சாரங்களிலிருந்து நாம் கற்க கூடிய பாடங்கள் எனக்கு வியப்பைத் தருகிறது. அவை பொருள் ரீதியாக ஆதாயம் தரவில்லை என்றாலும், ஆழ்ந்த நன்றியுனர்வையும், குதுகலத்தையும் பொழிகின்றன! உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சுவா...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலதிக தகவலுக்கு, காண்க: https://www.facebook.com/eternitymatterswithnorma

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்