திட்ட விவரம்

நன்றி செலுத்தும் அறுவடை ஆண்டு முழுவதும்!மாதிரி

Harvest Thanksgiving All Year Round!

7 ல் 3 நாள்

நன்றி நிறைந்த உள்ளத்தோடு தேவபிரசன்னத்திற்குள் வாருங்கள்

கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜானுமாயிருக்கிறார்.சங்கீதம் 95:1-3

சிலர் அதிகாலை உற்சாகத்தோடு எழுந்து, அந்த நாளின் பணிகளை சந்திக்க பரவசமுடன் புறப்படுவர். பலர் அதிகாலை வெளிச்சத்தைக் கண் விரும்பாது, போர்வையை இழுத்து தலையை மூடி அந்த நாளை சந்திக்க விருப்பமின்றி முடங்குவர்.


இந்த தியானத்தின் வழியாக நாம் அனைவரும் ஒன்றைக் கற்றுக் கொள்வோம் என நான் உறுதியாக நம்புகிறேன். அது நாம் விழித்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கர்த்தருடைய தெய்வீக பிரசன்னத்தில் வாழும் மிகப் பெரும் பாக்கியத்தை, வாய்ப்பை பெற்றிருக்கிறோம். இதை எப்படி நான் அறிந்து கொள்வது? எப்படியெனில், கல்வாரி சிலுவையில், பூமி அதிர்ந்த போது, தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக கிழிக்கப்பட்டு நாம் தேவ சமூகத்திற்கு முன்பாக தைரியமாக நிற்க அனுமதி பிறந்தது. இயேசுவின் சிலுவை மரணம் தேவ பிரசன்னத்தில் நுழையும் உரிமையை சம்பாதித்து கொடுத்தது. நமக்காக இனி ஆசாரியர் செல்லத் தேவையில்லை. நீங்களும், நானும் நேராக தேவ பிரசன்னத்தில் இலவசமாக நுழைய முடியும்.


ஒவ்வொரு நாள் காலை கண்விழிக்கும்போது, நமது ஜன்னலின் வழியாக பிரகாசிக்கும் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கும் போது, நீல நிற ஆகாய வெளியை காணும்போது, பறவைகளின் மெல்லிய கீச் கீச்செனும் குரல்களை கேட்கும்போது, நாம் ஒருவித தேவ பிரசன்னத்தில் இருக்கிறோம். அவரே அனைத்தையும் படைத்தவர். நாம் கர்த்தருக்கு எப்படி வணக்கத்தை சொல்வது? வேதம் சொல்கிறது, துதித்து, பாடி, மகிழ்சியோடு அவரது சமூகத்திற்கு நன்றியறிதலோடு வாருங்கள்.


இன்றைய பயிற்சி


சோர்வாக, முறுமுறுத்து விழித்தெழும்புவர் எனில் அப்பழக்கத்தை விட்டொழியுங்கள்.


காலை தேநீர் அல்லது காபி பருகும் முன்னர் புன்னகைக்கவும்


உற்சாகத்துடன் உங்களுக்கு பிரியமானவர்களை வாழ்த்தி, அவர்கள் செய்த ஏதாவது ஒரு செயலை நினைவூகூர்ந்தது நன்றி சொல்லுங்கள்.


உங்கள் அலுவலகம் அல்லது கடை நோக்கி வாகனத்தில் பயணிக்கும் போது, உற்சாகமாக பாடல்கள் பாடவும்



Key: நாள்_3
நாள்_3
நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Harvest Thanksgiving All Year Round!

பிற கலாச்சாரங்களிலிருந்து நாம் கற்க கூடிய பாடங்கள் எனக்கு வியப்பைத் தருகிறது. அவை பொருள் ரீதியாக ஆதாயம் தரவில்லை என்றாலும், ஆழ்ந்த நன்றியுனர்வையும், குதுகலத்தையும் பொழிகின்றன! உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சுவா...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலதிக தகவலுக்கு, காண்க: https://www.facebook.com/eternitymatterswithnorma

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்