நன்றி செலுத்தும் அறுவடை ஆண்டு முழுவதும்!மாதிரி
விளைச்சல் தரும் வேர்கள்!
2020 ஆம் ஆண்டில், எனது மகளும் அவரது கணவரும் ஆப்பிரிக்காவின் க்ருமேட்டிக்கு சென்றனர். அங்கு ஒரு கிராமத்தில் வசித்ததொரு குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் களிமண், மரச்சட்டங்கள் மற்றும் புற்களால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்தனர். இந்தக் குடும்பத்தின் தாய் தன் பிள்ளைகளுக்குக் குச்சிகளால் ஒரு அழகிய ஊஞ்சல் அமைத்திருந்தார். அவர் தரையில் அமர்ந்து கொண்டு, அதனது குடும்பத்தின் உணவைத் தயாரித்தார். அவர்கள் இதுவரை சந்தித்திராத எனது மகளின் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டு, தனது குழந்தைகளுடன் இணைந்து, பாட்டுகள் பாடியும், கைகளை பிடித்துக் கொண்டும், ஒரு குடும்பத்தைப் போல மகிழ்ந்து களித்தனர். இந்த உலகத்தையே சொந்தமாக அடைந்தது போல, அந்த முழுக் குடும்பமும் மகிழ்ச்சியையும், நன்றி மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது!
இந்தச் சந்திப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஏனென்றால், நன்றியும், மகிழ்ச்சியும் சூழ்நிலைகளைச் சார்ந்தது அல்ல, மாறாக நம் இதயத்தில் உள்ள மதிப்பீடுகள் மற்றும் நாம் விஷயங்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதை உணர்ந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழியாகும். இந்த குடும்பம் அவர்களின் வாழ்க்கை முறையை மட்டுமே அறிந்திருந்தது. அத்துடன் அவர்கள் தங்களிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர்.
உலகெங்கிலும் உள்ள நம்மில் பலர் நவீன வசதிகளையும், சமீபத்திய தொழில்நுட்பத்தின் வசதிகளையும் அனுபவிக்கிறோம். நமக்கு தினசரி மூன்று வேளையும் உணவு கிடைக்கின்றது. இடையில் தின்பண்டங்களையும் கொறிக்கிறோம் ஆனாலும், சிலரே திருப்தி அடைய கற்றுக்கொண்டுள்ளோம்.
நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றுப் பார்த்தால், ஒன்று நாம் முணுமுணுப்பவர்களாகவும், குறை கூறுபவர்களாகவும் மாறி, இல்லாததைக் குறித்து ஏங்குபவர்களாக இருக்காறோம் அல்லது ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்தக் குட்டிக் குடும்பம் தங்களுக்கு இருப்பதை ஏற்றுக்கொண்டு நன்றியுடன் வாழ்வதைப்போல வாழ்கிறோம்!
"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் அவர்கள் இதுவரை சந்தித்திராத விருந்தினர்களை கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." கொலோசியர் 2:6-7
நாம் கர்த்தரில் ஆழமாக வேருன்றி இருந்தால், அத்தகைய விசுவாசத்தில் நிலைத்திருந்தால், நாம் நன்றி உணர்வில் நிரம்பியிருப்போம் எனத் திருமறை போதிக்கிறது. மிகுதியாக செழித்திருப்பது எதுவென்றால் மிகுதியாக பகிர்தலே.
இன்றைய பயிற்சி:
· நீங்கள் கடைசியாக எப்போது நன்றியுணர்வோடு இருந்தீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.
· மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் நன்றியுணர்வு கசியும் படி நெகிழ்வான தருணங்கள் எத்தனை முறை நிகழ்ந்தது என ஆராய்ந்து பாருங்கள்.
· நீங்கள் அனுபவிக்கும் பல ஆசீர்வாதங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்குங்கள்!
· நன்றியுணர்வில் நிறைந்திருப்போமாக!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
பிற கலாச்சாரங்களிலிருந்து நாம் கற்க கூடிய பாடங்கள் எனக்கு வியப்பைத் தருகிறது. அவை பொருள் ரீதியாக ஆதாயம் தரவில்லை என்றாலும், ஆழ்ந்த நன்றியுனர்வையும், குதுகலத்தையும் பொழிகின்றன! உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் சுவாசிப்பது போல, நன்றியும் குதூகலமும் என்னுள் ஒரு பகுதியாக இயல்பாக இருக்க விரும்புகிறேன்! இந்தப் பயிற்சியில், நன்றி செலுத்தும் காலத்தை, தினசரி அனுபவமாக மாற்றுவது எப்படி என்பதைக் கண்டுபிடிப்போம்!
More