வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 4 நாள்

நம்விசுவாசம்சோதிக்கப்படுதல்

நாம்யார்மேல் விசுவாசத்தை வைக்கிறோம், அதை ஏன் வைக்கிறோம் என்பது முக்கியமானது. இயேசுவில் விசுவாசிகளாக பல நேரங்களில் நாம் ஏன் அவர் மீது விசுவாசத்தை வைப்பதைத் தெரிந்து கொண்டோம் என்பதைக் கூட மறந்துவிடுகிறோம். ஆகவே பிரச்சனைகள் நம்மைத் தாக்கும்போது, யாரிடம் உதவி கேட்பது என்று நினைக்கத் துவங்குகிறோம். யாரிடம் ஆலோசனை கேட்பது, யாரைத்தொடர்புகொள்வது என்று நினைக்கிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் உதவிக்காக நாடும் இடங்களே நமது விசுவாசத்தின் தரத்தை வெளிக்காட்டிவிடுகிறது. இயேசு, நற்செய்தி நூல்களில் தனது சீடர்களிடம் கடுகு விதை அளவுக்கு, (சிறிதாகவோ பெரிதாகவோ)விசுவாசம்கொண்டிருங்கள்என்கிறார்.இது,அவர்அளவைவிட தரத்தையே முக்கியப்படுத்தினார் என்பதைக் காட்டுகிறது.

நமதுவிசுவாசத்தின்தரமானதுவனாந்தரத்தின்நடுவேசோதிக்கப்படுகிறது.நமதுஜெபங்களுக்குபலன்இல்லாததுபோலத்தோன்றும்போதுநாம்ஜெபத்தில்எதுவும்பயன்உண்டாஎன்றுநினைக்கத் துவங்குகிறோம். தொடர்ச்சியாக தோல்விகள் தொடர்ந்து வரும்போது கர்த்தர் தாம் சொன்னபடி நம் பக்கத்தில் இருக்கிறாரா என்று சந்தேகப்படுகிறோம். தனிமையேதொடர்ந்து நம் துணையாக இருக்கும்போது கர்த்தர் நம்மைவிட்டு விலகிவிட்டார் என்று யூகித்துக் கொள்கிறோம்.

இப்படிப்பட்டசோதனைக்காலத்தில்முக்கியமானஅம்சமாகஇருப்பது, கர்த்தரின் வார்த்தையை நோக்கிச் சென்று அவர் யாராக இருக்கிறார் என்றும் யாராக இருப்பார் என்று சொல்லியிருப்பவைகளைப் பற்றிக் கொள்வது ஆகும். சங்கீதக்காரர்கள் மீண்டும் மீண்டும் அவர்களது குழப்பங்களையும் பாடுகளையும் எழுதுகிறார்கள் பின்னர் கர்த்தரின் குணத்தை அங்கே கொண்டு வருகிறார்கள். அவரது குணங்களையும், நிலையான அன்பையும் பொறுமையையும், வல்லமையையும் அழகையும் இதுபோன்ற பல குணங்களையும் புகழ்ந்து போற்றுகிறார்கள்.

செய்யவேண்டியவை:

தினமும் கர்த்தரின்வார்த்தையைவாசிக்கும்அமைதிவேளையில் கர்த்தரின் குணங்களை எழுதி வையுங்கள். கர்த்தாவே நீர்………….. என்று கோடிட்ட இடத்தை நிரப்புங்கள். உதாரணமாக, கர்த்தாவே நீர் சர்வ வல்லவர், கர்த்தாவே நீர் அதிசயமானவர்.

அதைக் குறித்தபின், சில நிமிட நேரம் கர்த்தரின் அந்தக் குணத்தை தியானிக்க நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்குள் பதிந்து வனாந்தரமான பாதித்திருக்கும் உங்கள் வாழ்வின் வறட்சியான பகுதிகளுக்குள் பரவிச் செல்ல அனுமதியுங்கள். அதுநிச்சயமாகஉங்களுக்குநம்பிக்கையையும்சமாதானத்தையும்கொண்டுவரும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/