வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

7 ல் 1 நாள்

வனாந்தரம்கடினமானதுஆனால்மோசமானதுஅல்ல

பழையஏற்பாட்டில்வனாந்தரம்என்பதுபெரியதாகவும்பயமுறுத்துவதாகவும்விவரிக்கப்பட்டுள்ளது. கர்த்தர் மீது முழுமையான நம்பிக்கை இல்லாததால் இஸ்ரவேலர்கள் நாற்பது ஆண்டுகள் சுற்றித்திரிந்த இடம் இதுவாகும். கர்த்தர்தமதுதெய்வீக ஞானத்தால் வனாந்தரத்துக்குள் நடத்தி, முதிய காப்பாளர்களான சந்ததி முழுவதும் இறந்து போகும்வரை அவர்களின் அருகே இருந்தார். அவர்களைப் பாதுகாத்து, அவர்களது தேவைகளை சந்தித்தார். பின்னர்யோசுவாவின்தலைமையில்புதிய சந்ததியை வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டுக்குள் நடத்திச் சென்றார்.

இன்றுநமதுவாழ்வுகளில்,வனாந்தரம்என்பதுஒருஇடம்என்பதைவிடஒருகாலகட்டமாகவேஅதிகம்இருக்கின்றது. நமது சூழ்நிலைகள், எதிரிகள் மற்றும் குறைகளை எண்ணிப்பார்ப்பதற்காக நம்மை நெருக்கி அனுப்புவதற்காக ஒருங்கிணைக்கும் ஒரு காலமாக இது இருக்கிறது. பலஅடைக்கப்பட்ட கதவுகளுக்கு வெளியே திக்கற்று அலைகின்ற ஒரு காலம் இது. தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களின் வெம்மையான இருக்கையில் நாம் அமர்ந்திருப்பது போல சில நேரங்களில் இது இருக்கும். முடிவேஇல்லாதகாத்திருப்புகளும் பதில் கிடைக்காத ஜெபங்களும் நிறைந்த தரிசுநிலம்போலஇது நம்மை உணரச் செய்கிறது.

வனாந்தரக்காலம்என்பதுகடினமானதாக இருக்கலாம், ஆனால் அது கனியற்றதாக இருக்காது. இதில்முழுவதும்கர்த்தரின்இனிய பிரசன்னத்தின் அடையாளங்கள் இருக்கும். எதிர்பார்க்காத வழிகளில் நீங்கள் தயவைப் பெற்றுக் கொள்வீர்கள். விளக்கப்பட முடியாத ஆசீர்வாதங்களும் வழி நெடுகே பொழியும். வனாந்தர காலத்தில் சரியான வழிகாட்டுதலைப் பெற்றுக் கொள்ளும் ஒரே வழியானது உங்கள் கண்களையும் இதயத்தையும் மனதையும் இயேசுவின் மீது வைத்து பரிசுத்த ஆவியானவர் சொல்பவற்றுக்கும் செய்பவற்றுக்கும் உணர்வுள்ளவர்களாக இருப்பது தான். இதுஉங்கள்நிலையாகஇருந்தால்உங்களதுபதிற்செயலானதுநன்றி உணர்ச்சியாக இருக்கும். அவர் நமக்குச் செய்த எல்லாவற்றுக்காகவும் நன்றி உள்ளவர்களாக, உங்கள் வாழ்வில் அவரது பிரசன்னம் தொடர்ச்சியாக இருந்ததற்காக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எந்த வனாந்தரமும் அண்ட சராசரங்களின் கர்த்தரை உங்களைவிட்டு விலக்கி வைத்துவிட முடியாது. ஏனென்றால்அவர்வனாந்தரத்துக்கும்கர்த்தர்தானே!

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்

வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/