வனாந்தரத்தில் இருந்து பாடங்கள்மாதிரி
வனாந்தரத்திலுள்ளஎதிரிகள்
ஒருஅன்பின் கர்த்தரால் நமக்கென்றே தனித்தனியாக உருவாக்கப்பட்டதாக வனாந்தரம் இருந்தாலும், கடினமான நேரங்களை, நரகத்தில் இருந்து வரும் தாக்குதல்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புக்கள் இருக்கின்றன. சுவாரசியமாக, பிசாசானவன் இயேசுவை சோதித்தபோது பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு நடத்திச் சென்றார். வனாந்தரம்என்பதுவீழ்ச்சிகளுக்குவாய்ப்புள்ளவைகளாக,மூடப்பட்டபாதைகளாக, கடும் தொல்லைகளுள்ள திடீர் மாற்றங்களாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தன்னிடம் நாம் நெருக்கமாக வருவதற்காகவும் அவரை அதிகமாக சார்ந்து கொள்ளவும் கர்த்தரால் அனுமதிக்கப்படுபவை ஆகும். இருந்தாலும்கூட எதிரியானவன் இந்தக் காலகட்டத்தில் நம்மை சோர்படையச் செய்யவும், கோபமடைய வைக்கவும், நம் கவனத்தைக் கவரவவும் தன்னால் முடிந்தவைகளை எல்லாம் செய்வான்.அவன் தந்திரமான எதிரி, அவனது நோக்கமே திருடுவதும் கொல்வதும் அழிப்பதும் ஆகும். தனது ஆயுதக்கிடங்கில் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் இதற்காகப் பயன்படுத்துவான். வெற்றியை அனுபவிப்பதற்கான முக்கிய அம்சமானது, இந்த காலத்தில் நாம் உணரும் பலவகை உணர்ச்சிகளின் நடுவே சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதாகும். நம் விசுவாசத்தைக் கவிழ்க்கவும் பொறுமையை இழக்கச் செய்யவும் நம்மை சோர்ந்து போகவும் வைக்க முழு பலத்தோடும் தாக்குதல் நடத்தும் எதிரியின்திட்டங்களைஅடையாளம்காண்பதுவும்முக்கியமானதாகும். பேதுருஎழுதியமுதல் நிருபத்தில், சாத்தான் கர்ஜிக்கிற சிங்கம் போல யாரை விழுங்கலாமோ என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்போஸ்தலனாகிய யாக்கோபு தாழ்மையாக இருந்து அதன் மூலம் அவனை எதிர்க்கும்படியாக நம்மை அழைக்கிறார். இந்த சூழ்நிலையில் நமக்குக் கொடுக்கப்படும் வாக்குத்தத்தமானது, அவன் ஓடிப்போவான் என்பதேயாகும்.
வனாந்தரத்தின் நடுவில் நாம்சாத்தானின்திட்டங்களைப்பற்றிஞானமற்றவர்களாகஇருப்பதால் தான் பெரும்பாலான நேரங்களில் பிரச்சனைகள் தீவிரமடைகின்றன. கர்த்தர் நல்லவர் என்பதையும் அவரது பிரசன்னம் உடன் இருக்கிறதா என்பதையும் பற்றிய சந்தேகத்தைக் கிளப்புவதும், என்ன நடக்கப் போகிறதோ என்பதைப் பற்றிய பயத்தையும் கவலையையும் உருவாக்குவதும், முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிட்டு தற்காலத்தில் இருக்கும் நிலையைக் குறித்து முறுமுறுக்க வைப்பதும் அவனுடைய செயல்திட்டங்கள் ஆகும்.
இந்ததாக்குதல்களைசமாளிக்கநாம்இதுவரைநடத்தியகர்த்தருடன்நெருக்கமாகசெல்வதற்கானவழிகளைக்கண்டுபிடிப்பதுஆகும். நமது பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அதைப் பெயர் சொல்லி அழைத்து, பயம், சந்தேகம் மற்றும் திருப்தியற்ற நிலை போன்றவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியையும் வேரிலிருந்தே பிடுங்கி எறிந்துவிட வேண்டும்.
எதிரியின்முன்நாம்கூனிக்குறுகிநிற்கவேண்டியதில்லை. தைரியமாகவும்உறுதியாகவும்இயேசுவில்நமக்குஇருக்கும்வெற்றியுடன்நிமிர்ந்துநிற்கலாம்.கர்த்தரின்வார்த்தையைபட்டயமாகபயன்படுத்திஎப்போதும்ஆவியில் நிறைந்து ஜெபித்துக் கொண்டிருக்க வேண்டும். வெற்றி உங்களுடையது என்று விசுவாசிக்க வேண்டும்.
இந்த திட்டத்தைப் பற்றி
வனாந்தர அனுபவமானது நம்மைத் தொலைந்து போனவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, உதவியற்றவர்களாக உணரச்செய்யும் ஒரு காலமாகும். ஆனாலும் வனாந்தர அனுபவத்தில் இருக்கும் சுவாரசியமான தன்மை என்ன என்றால், இது நம் கண்ணோட்டத்தை மாற்றக்கூடியது. வாழ்வை மாற்றமடையச் செய்வது. விசுவாசத்தை உருவாக்கும் தன்மையுடையது. இந்த வாசிப்புத்திட்டத்தை நீங்கள் படிக்கும்போது வனாந்தரத்தை வெறுக்காமல் அதைத் தழுவிக் கொண்டு கர்த்தர் உங்களில் தனது சிறப்பானதைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதுவே எனது ஜெபமாகும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/