உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

7 ல் 7 நாள்

சுகமாகுதல் நடைபெறாதபோது

நீண்ட காலமாக சுகமாகுதல் நடைபெறாதது போன்ற நேரங்கள் நம் வாழ்வில் ஏற்படலாம். நீங்கள் நீண்டகாலமாக ஜெபித்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் இன்னும் சுகமடையாமல் இருக்கலாம். மக்கள் அனுபவிக்கும் பல சூழ்நிலைகளையும் அவற்றில் கர்த்தரின் சித்தம் என்ன என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றை மட்டும் நாம் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும். அதாவது நித்தியத்தின் இந்தப் பகுதியாகிய உலகத்தில் நாம் சுகமாகுதலை அனுபவிக்காமல் போனாலும் கூட வேதனை, கண்ணீர், பாடுகள் இல்லாத ஒரு இடம் நமக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இது எனக்கு ஒரு பெரும் ஆறுதலாக இருக்கிறது. ஏனென்றால் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையானது நித்தியத்தின் பார்வையில் ஒரு சிறு துரும்பு தான்.ஆகவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக, நமது நித்தியமானது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் (பிலிப்பியர் 1:21) என்பதை அறிந்தவர்களாக நாளையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். இப்போதைக்கு, வாழ்வின் வேதனை மற்றும் பாடுகளின் காலத்தில் கடந்து செல்லும்போது அவற்றைத் தாங்கிக் கொள்வதற்கான கிருபையைக் கர்த்தர் தருவார் என்ற உறுதி நமக்கு இருக்கிறது. விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் நாம் எழுந்து வருவோம். அது உறுதியானதாகவும் உயிர்த்துடிப்புடனும் இருக்கிறது. உங்களைப் பெயர் சொல்லி அழைத்த கர்த்தரைத் தொடர்ந்து நம்புங்கள். கர்த்தரின் வார்த்தையைத் தொடர்ந்து அறிக்கையிட்டுக் கொண்டே இருங்கள். எல்லா நேரத்திலும் ஜெபித்துக் கொண்டிருங்கள். உங்களில் செயல்பட பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/