உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

7 ல் 1 நாள்

மனிதர் உருவாக்கும் சுகம், கர்த்தர் சுகமளிக்கிறார்

சுகமாகுதல் என்பதுவே ஒரு புதிர் தான். ஆனால் உறுதியான ஒன்று என்னவென்றால் நமக்குத் தெரிந்த, நாம் நேசிக்கின்ற உயிருள்ள கர்த்தர் தான் அதை நமக்குத் தருகின்றார். அவர் எந்த வழியிலும் சுகமாகுதலைக் கொண்டு வருவார்.

1.கர்த்தரால் நம் உடலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் அமைப்புகளுடன் இணைந்த தற்கால மருந்துகள் வேலை செய்தல்

2.நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் புண்கள் ஆறும் தொடர் நிகழ்வுகள்

  1. அல்லது, ஜெபத்தின் மூலம் இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் சுகமாகுதல்.

நான் மீண்டும் சொல்கிறேன், அவர் தான் முழுமையான சுகமாக்குபவர்! நாம் உயிருடன் இருந்து இதை வாசிப்பதுவே, படைத்து, பாதுகாத்து, புதுப்பிக்கும் அவரது உன்னதத்தன்மையினால் தான்.

நாம் கர்த்தரிடம் சுகமாகுதல் எப்படி நடக்க வேண்டும் என்றோ, அது எப்போது நடக்க வேண்டும் என்றோ கட்டளை கொடுக்க முடியாது என்பதையும் நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். ஏதாவது ஒரு வழியில் அவர் சுகமாக்குவார் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் நம்பலாம்.

பெருந்தொற்றுக் காலத்தில் பல மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அதிகமாக முன்னணியில் சுற்றிக் கொண்டிருந்தன. மனிதர்கள் சுகமாகுதலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால் நிரந்தரமாக நிலைத்திருக்கும் சுகமாகுதலைப்பற்றி கண்டு கொள்வதே இல்லை.


உன்னத உண்மைகள் என்ற தனது புத்தகத்தில் சூசன் ஹாவிட்ச் என்பவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

“சுகமாகுதல் என்பது உடலளவிலான சுகவீனத்தை இல்லாமல் செய்கிறது. ஆனால் உடலளவு சுகமாகுதல் மட்டுமே சுகமாகுதல் அல்ல. மாறாக மனதையும் ஆன்மாவையும் சரி செய்து பலப்படுத்தி, உடலளவில் சுகம் கிடைப்பது சாத்தியம் இல்லாமல் போனாலும் கூடவாழ்வின் தரத்தை முன்னேற்றுவது தான் உண்மையான சுகமாக்குதல்.”

உலகத்தின் மீட்பராகிய இயேசு கிறிஸ்து உடல்நலம் சரியாவதைப் பற்றி மட்டும் அக்கறையுள்ளவராக இல்லை. அவர் முழுமையான சுகமாகுதலைப் பற்றியவராகவே இருக்கிறார். எப்போது, எப்படி அவர் சுகமாக்குவார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நான் உன் காயங்களை குணமாக்குவேன், உன் ஆரோக்கியத்தை மீட்டுத் தருவேன்என்று அவர் சொன்னார் என்றால் அவர் அதைச் செய்வார்! அவர் வழியில் அவர் காலத்தில்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/