உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்மாதிரி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

7 ல் 5 நாள்

முழுமையான குணமாகுதல்

நான் உன் பரிகாரி என்று கர்த்தர் சொல்லும்போது, நம்மைப் பற்றிய அனைத்தையும் குணமாக்குவதாகச் சொல்கிறார். ஆம், அவர் நமது உடலின் சுகத்தைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார். நாம் உணர்வுப்பூர்வமாகவும், ஆன்மிகத்திலும் புதுப்பிக்கப்பட்டு குணமாக வேண்டும் என்று விரும்புகிறார். பிசாசு பிடித்தவர்களை அல்லது அசுத்த ஆவிகளால் உடலில் குறை இருந்தவர்களை குணமாக்கும்போது இயேசு இதைச் செய்தார்.

நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாக உருவாக்கப்பட்டோம் என்று வேதாகமம் சொல்கிறது. நாம் அதிசயக்கத்தக்க வகையில் சிக்கலான படைப்பாக இருக்கிறோம் என்று ஒரு ஆங்கில வேதாகமத் திருப்புதல் சொல்கிறது. இந்த சிக்கலுக்குக் காரணம், நாம் உடலால் மட்டுமல்ல, ஆன்மாவுடன் படைக்கப்பட்ட ஆன்மிகப் படைப்புகள்.

உடைந்த ஆவி, நமது சிதைந்த ஆன்மா, வேதனைப்படும் உடல் ஆகிய அனைத்தையுமே குணமாக்குவதில் இயேசு அக்கறை உள்ளவராக இருக்கிறார். இவை அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன. எரேமியா 30:17 இல் கர்த்தர் நமது ஆரோக்கியத்தைப் புதுப்பிப்பதாக, நம் காயங்களை குணமாக்குவதாகச் சொல்லும்போது நமக்கு இருக்கின்றன என்றே அறியாத ஆழமான காயங்களைப் பற்றிக் கூறுகிறார்.

இந்த காயங்கள் சிறு வயதில் ஏற்பட்ட தவறான கையாளுதலாலோ, கைவிடப்பட்டதாலோ, அலட்சியப்படுத்தப்பட்டதாலோ, தள்ளிவிடப்பட்டதாலோ, வன்முறையாலோ, சந்திக்கப்படாத ஆசைகளாலோ, நட்டங்களாலோ உருவாகி இருக்கலாம். தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட காயங்களாக சில காயங்கள் இருக்கலாம். கண்ணுக்குத் தெரியாமல் சுற்றியிருக்கும் துயரத்தை சரியாக்க எங்கேயிருந்து துவங்க வேண்டும் என்பது கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்த காயங்களை குணமாக்க கர்த்தர் விரும்புகிறார். ஏனென்றால் காயப்பட்டவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களைக் காயப்படுத்துவார்கள். உங்களைக் குணமாக்கி புதுப்பிப்பதன் மூலம் மற்றவர்களையும் நீங்கள் குணமாக்கி புதுப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார் கர்த்தர். அருகில் வந்து உதவும் நபராக பரிசுத்த ஆவியானவர் கிரேக்க மொழியில் பாராக்ளிட்டோஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ஆழமான காயங்களை வெளிப்படுத்தி, புதுப்பிக்கும் ஒரு ஆலோசகராக அவர் இருக்கிறார். புதுப்பித்தலின் ஒரு முகவராக அவர் இருக்கிறார். உண்மையாகவே குணமாக்குகிறவர் அவர். அவரை நம் வாழ்க்கையில் வரவேற்க வேண்டும். இன்று அதைச் செய்வீர்களா?

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

உள்ளேயும் வெளியேயும் குணமாகுதல்

இந்தத் தலைப்பில் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவில்லை என்றாலும், இயேசு இந்த பூமியில் இருந்தபோது அவர் செய்த அருட்பணியின் பெரும்பகுதியானது சுகமாக்குதலாகத் தான் இருந்தது. இந்த வேதாகமப் பாடத்திட்டத்தை நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் ஆழமான முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்படி சுகத்தை மாபெரும் பரம வைத்தியர் மட்டுமே கொடுக்க முடியும்

More

இந்த திட்டத்தை வழங்கிய கிறிஸ்டின் ஜெயகரனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom/