பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்மாதிரி
நற்செய்திப்பணிக்கான அழைப்பு
உங்கள் முன்னுரிமைகள் பட்டியலில், இயேசுவைப் பற்றிய செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அருட்பணியும் நற்செய்திப்பணியும் எந்த இடத்தில் இருக்கின்றன? அது உங்கள் பட்டியலில் மேலே இல்லாமல் இருந்தால், ஏன் அப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அது முதல் முன்னுரிமையாக மாறுவதற்கு என்ன நடக்க வேண்டும்?
நான் நற்செய்திப்பணியைப் பற்றி ஏன் இத்தனை வைராக்கியமாக இருக்கிறேன் என்று யாராவது கேட்டால், 18 வயதில் நான் இயேசுவை சந்தித்தபோது என் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பு தான் காரணம் என்பேன். இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான தருணங்கள். இயேசு உண்மையிலேயே உயிரோடு எழுந்தார். அவரது மரணமும் அடக்கமும் முடிவு அல்ல. கிறிஸ்துவில், நீங்களும் கூட மரணத்தில் இருந்து எழுந்திருக்க முடியும். இது தான் யாருக்குமே நீங்கள் சொல்லக்கூடிய மிகவும் நல்ல செய்தி ஆகும். நான் அனைவரிடம் இதைச் சொல்ல விரும்புகிறேன்.
மக்கள் அன்பைத் தேடுகிறார்கள். இயேசு உங்களுக்காகத் தன் உயிரைக் கொடுத்ததால், நீங்கள் ஆழமாக நேசிக்கப்படுகிறீர்கள் என்பதைக் கண்டு கொள்ள முடியும். பவுல் சொன்னது போல கர்த்தரின் குமாரன் என்னை நேசித்து தன்னையே எனக்காகக் கொடுத்தார் (கலாத்தியர் 2:20). உங்களுக்காகத் தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு இயேசு உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் அறியும் போது அது வாழ்க்கையையே மாற்றக்கூடியது.
மக்கள் வாழ்க்கையில் நோக்கத்தையும் தேடுகிறார்கள். இறுதியாக, கர்த்தருடன் உறவு இல்லாமல் இருந்தால் வாழ்க்கை என்பது உங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்காது. அதை சாத்தியப்படுத்தத் தான் இயேசு வந்தார். கர்த்தருடன் மக்களுக்கு உறவு ஏற்படும்போது, அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கான நோக்கத்தைக் கண்டு கொள்கிறார்கள்.
ஆகவே, இந்த உலகத்தில் பெரும் பசி இருக்கின்றது. ஆகவே தான் திருச்சபைகளை, அருட்பணியையும் நற்செய்திப்பணியையும் தங்கள் முன்னுரிமையாக வைக்க வேண்டும் என்று நான் எப்போதும் உற்சாகப்படுத்துகிறேன். உண்மையிலேயே திருச்சபையானது இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்வதை முன்னுரிமையாக்கும்போது தளைத்து செழிக்கும். நற்செய்தியைப் பகிர்வதை உங்கள் முன்னுரிமையாக்கும்போது மற்றவை அனைத்தும் பின் தொடர்ந்து வரும். திருச்சபையில் ஒற்றுமை என்பதும் மிகவும் முக்கியமானது. ஆனால் அதை மட்டுமே உங்கள் ஒரே நோக்கமாக வைத்திருந்தால், நீங்கள் உங்களது வேற்றுமைகளைப் பற்றி மட்டுமே விவாதித்துக் கொண்டிருப்பீர்கள். நற்செய்திப்பணியை உங்கள் முன்னுரிமையாக்கும்போது, நீங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் உலகம் விசுவாசிக்க வேண்டுமானால் நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்று இயேசு ஜெபித்தார். உலகம் எங்கும் அதிகமதிகமான கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பொதுவான வைராக்கியத்திற்காக ஒன்றுபடுகிறார்கள். பாரம்பரியங்கள், இடங்கள் மற்றும் மொழிகளையும் தாண்டி இவற்றை செய்ய அவர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.
நற்செய்திப்பணியை உங்கள் முன்னுரிமையாக்கினால் நீங்கள் சீடத்துவத்தில் வளரவேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்வில் ஆவியின் கனி இல்லாமல் உங்களால் ஒருபோதும் இன்னொருவரை விசுவாசத்துக்குள் அழைத்து வரமுடியாது. நீங்கள் அதிகம் அன்பு செய்கிறவர்களாக, அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக, அதிகம் சமாதனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆவியானவரால் நிரப்பப்படுவதன் நோக்கம் நாம் இயேசுவின் சாட்சிகளாக இருக்க வேண்டும் என்பது தான். இதை நாம் அப்போஸ்தலர் 1:8இல் இயேசு சொல்லக் கேட்கிறோம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” பரிசுத்த ஆவியானவரை சார்ந்து இருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகமாக நாளை இந்த வாசிப்புத் திட்டத்தை நிறைவு செய்யும் போது பார்க்கலாம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கர்த்தரின் குரலை நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்? உலகப் பிரச்சனை காலத்தில் கர்த்தர் என்ன சொல்வார்? இந்த நான்கு நாள் திட்டத்தில், ஆல்ஃபாவின் நிறுவனர் நிக்கி கம்பெல் அவருக்கு கர்த்தரின் குரலைக் கேட்க உதவியாக இருந்த எளிய பயிற்சிகளை சொல்வதன் மூலம் துவங்குகிறார். கர்த்தர் நாம் பதிலளிக்க வேண்டும் என்று அழைக்கின்ற மூன்று முக்கிய சவால்களையும் தொடர்ந்து சொல்கிறார்: திருச்சபையில் மாபெரும் ஒற்றுமை, நற்செய்தி சொல்வதில் முன்னுரிமை மற்றும் தினசரி பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருத்தல்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய ஆல்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.leadershipconference.org.uk/