பிரச்சனை நேரத்தில் கர்த்தரின் குரல் கேட்டல்மாதிரி
பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருப்பதற்கான அழைப்பு
கர்த்தரின் பிரசன்னத்தில் நேரம் செலவிடுவது தான் உங்கள் வாழ்வின் மிகவும் முக்கியமான செயலாகும். அவர் தனது ஆவியானவரைக் கொடுத்து, நம்மை சுகப்படுத்த, வழிநடத்த, பலப்படுத்த, கண்டித்து உணர்த்த, ஆற்றல் கொடுக்க உதவுகிறார். நம் வாழ்வில் வேறு எதையும் விட கர்த்தரின் பிரசன்னம் தேவையாக இருக்கிறது. ஆனால் எங்கே கர்த்தரின் பிரசன்னத்தை நாம் காண முடியும்?
நான் இயேசுவை சந்தித்தபோது, நான் பரிசுத்த ஆவியானவரை அனுபவித்தேன். ஆண்டவரின் ஆவியானவர் என் வாழ்வை மாற்றி, புதிய மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் மற்ற மக்களை நேசிக்கும் தன்மையையும் கொடுத்தார்.
தொடர்ச்சியாகக் கர்த்தரின் ஆவியானவரை சார்ந்திருத்தல் என்பது அருட்பணிக்கும் நற்செய்திப்பணிக்கும் தேவையானதாகும். ஏனென்றால் இயேசுவின் அருட்பணியானது, அவரது பலத்தால் நாம் செய்ய வேண்டியதாகும். நம் பலத்தால் அல்ல.
இயேசு என்னும் பாறையின் மேல் தான் திருச்சபையானது கட்டப்பட்டிருக்கிறது. இயேசுவை மையமாக இருக்கிறார். திருச்சபையானது இயேசுவின் சரீரமாக இருக்கிறது. ஆராதனையில் நாம் இயேசுவை சந்திக்கிறோம், ஜெபிக்கும்போது அவரை சந்திக்கிறோம். கர்த்தரின் வார்த்தையை வாசிக்கும்போது அவரை சந்திக்கிறோம் - அவர் வேதாகமத்தின் மூலமாகப் பேசுகிறார். நாம் ஒன்றாக இணைந்து வரும் போது ஐக்கியத்திலும் இயேசுவை நாம் சந்திக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் மூலமாகத் தான் நாம் இயேசுவை நேரடியாக சந்திக்க முடியும்.
எனது விருப்பமான ஜெபம் என்பது எளிமையான, மூன்று வார்த்தைகள் உள்ள ஜெபமாகும்: “பரிசுத்த ஆவியானவரே வாரும்.” எங்கள் சபையின் ஒவ்வொரு ஆராதனையிலும் இந்த ஜெபத்தை செய்வதற்கான நேரம் உண்டு. இது மூன்றே சொற்களுள்ள ஜெபம், ஆனால் இது மிகவும் வல்லமை வாய்ந்தது.
பரிசுத்த ஆவியானவ்ரின் வல்லமையை நீங்கள் எப்படி அனுபவித்திருந்திருக்கிறீர்கள்? அவரது வல்லமை, சுகமாக்குதல், உற்சாகப்படுத்துதல் உங்களுக்கு எந்த இடத்தில் தேவைப்படுகிறது? உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பரிசுத்த ஆவியானவரை வரவழையுங்கள், அவரது வல்லமையை சார்ந்திருங்கள்.
நிக்கி மற்றும் பிப்பா கம்பெல் ஆகியோர் நடத்தும் தலைமைத்துவக் கருத்தரங்கு, ஒரே கர்த்தரின் குடும்பமாக ஒன்றிணைந்து வருவதற்கான பெரும் வாய்ப்பாகும். இதுஇயேசுவைசந்திக்க, பரிசுத்தஆவியானவரால்நிரப்பப்பட்ட, கர்த்தரின்அரசைக்கட்டிஎழுப்புவதில்நம்பங்கைசெய்வதற்குஆற்றல்பெரும்ஒருஇடமாகும். இதைப்பற்றிஅதிகம்அறிந்துகொள்ளஇந்தஇணையத்தளத்தைப்பார்வையிடுங்கள்: https://www.leadershipconference.org.uk/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கர்த்தரின் குரலை நீங்கள் எப்படிக் கேட்பீர்கள்? உலகப் பிரச்சனை காலத்தில் கர்த்தர் என்ன சொல்வார்? இந்த நான்கு நாள் திட்டத்தில், ஆல்ஃபாவின் நிறுவனர் நிக்கி கம்பெல் அவருக்கு கர்த்தரின் குரலைக் கேட்க உதவியாக இருந்த எளிய பயிற்சிகளை சொல்வதன் மூலம் துவங்குகிறார். கர்த்தர் நாம் பதிலளிக்க வேண்டும் என்று அழைக்கின்ற மூன்று முக்கிய சவால்களையும் தொடர்ந்து சொல்கிறார்: திருச்சபையில் மாபெரும் ஒற்றுமை, நற்செய்தி சொல்வதில் முன்னுரிமை மற்றும் தினசரி பரிசுத்த ஆவியானவரை சார்ந்திருத்தல்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய ஆல்பாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.leadershipconference.org.uk/