எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி
பிறருக்கான கிருபை
தேவ கிருபையை நாம் எந்த கிரியையையும் செய்து சம்பாதிக்கவில்லை. அதே போலவே, நாமும் பிறரிடம் இருக்க வேண்டும். எப்படி தேவன் நம்முடைய கிரியையை எதிர்பாராமல், நம்மீது கிருபையாய் இருக்கிறாரோ, அதே போலவே, நாமும் பிறர் மீது கிருபையாக இருக்கவேண்டும். "மனுஷர் உங்களுக்கு எப்படி செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள்" என்று பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 6:31இல் நாம் வாசிக்கிறோம். பிறரிடம் எதையும் எதிர்பாராமல் நாம் கிருபையாக நடந்து கொள்ளவேண்டுமென்று இந்த வசனம் நம்மை உற்சாகப்படுத்துகிறது. நாம் பிறரிடம் கிருபையாக இருப்பதின் மூலம், தேவ அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறோம். இதனால், அவர்களையும் மற்றவர்களிடம் கிருபையாக இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம்!
செயல்பாடு: இந்த தியான திட்டத்தின் மூலம் நீங்கள் தேவனை குறித்து கற்றுக்கொண்ட 3 காரியங்களை எடுத்து எழுதுங்கள். நீங்கள் கற்றுகொண்டவைகளை உங்கள் அன்றாட வாழ்வில் எப்படி பிரயோஜனப்படுத்தலாம் என்று சிந்தியுங்கள். தேவன் இருக்கிறவிதமாகவே இருக்கிறதற்காகவும், அவர் இன்னும் அதிகமாய் அவருடைய எல்லையற்ற தன்மைகளை குறித்து உங்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவும் அவருக்கு நன்றி செலுத்தி ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More