எல்லையற்றது: கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு எல்லைகளற்றது என்று கற்றுக்கொள்ளுங்கள்மாதிரி
பிறருக்கான மன்னிப்பு
நாம் பிறரை மன்னிக்கும்போது, தேவனை போலவே நடந்துக்கொள்கிறோம். நமக்கு மன்னிப்பை உண்டு பண்ணும்படியாகவும், தமக்குள்ளாக நமக்கு நித்திய ஜீவனை பெற்றுத்தரும்படியாகவுமே, இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். இந்த சத்தியத்தை மனதில் வைத்துகொண்டு, நாமும் நமக்கு பிறர் செய்த தீமைகளையும், துரோகங்களையும் மன்னிக்க வேண்டும். நம்முடைய மன்னிப்பு, அவர்கள் செய்த தீமையை நியாயப்படுத்தும் செயல் அல்ல. மாறாக, தேவனுடைய மன்னிப்பை அவர்களுக்கு பிரதிபலிக்கும் செயல். தேவ மன்னிப்பை நாம் பெற்றிருப்பதால், நாமும் பிறரை மன்னிக்க கடமைபட்டிருக்கிறோம் (மத்தேயு 6:14). இப்படி நமக்கு கிடைத்த தேவ மன்னிப்பை, ஆம் பிறருக்கு காண்பிப்பது எப்போது எளிதாக இருக்கபோவதில்லை. ஆனால், இப்படி செய்வதின் மூலமே நாம் எல்லைகளற்ற வாழ்வை தேவனுக்குள்ளாக வாழ முடியும்.
செயல்பாடு: பிறரை மன்னிப்பது ஏன் நமக்கு கடினமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு தீமை செய்தவர்களையும், உங்களை காயப்படுத்தினவர்களையும் மன்னித்து ஜெபியுங்கள். முடிந்தால், அந்த ஜெபத்தை உங்கள் நாளேட்டில் எழுதுங்கள். அவர்களை மனதார மன்னிக்க தேவனிடம் உதவி கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துவுக்குள்ளான வாழ்விற்கு வரம்பெல்லைகள் இல்லை, அது அளவில்லாதது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்தத் தியானத் திட்டம் இருக்கும். தேவனுடைய 3 முக்கிய பண்புகளைக் கவனித்து, அது நம்முடைய வாழ்க்கையில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள இந்தத் தியானத்திட்டம் உதவி செய்யும்.
More