தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி
விசுவாசியாக இருப்பது சத்துருவின் தாக்குதல்களுக்கு எதிராக உங்களுக்கு விதிவிலக்கு அளிப்பதில்லை, ஆனால் அது உங்களுக்கு தந்தையாகிய தேவனின் வல்லமையை— உங்களை காக்கவும் உங்களுக்கு நேரிட்டதை எதிர்த்திருப்பவும் கூடிய அந்த வல்லமையை நீங்களும் அணுக உதவுகிறது. நீங்கள் இந்த சண்டையில் வெற்றிபெற வேண்டுமென்றால்—நீங்களும் என்னுடன் கதையை மாற்றி அமைப்பதில், சத்துருவை வீழ்த்துவதில், மற்றும் உங்கள் வாழ்வில் அவனுடைய தாக்கத்தை முடக்குவதில் இணைந்துகொள்ள வேண்டுமென்றால்—முக்கியமானது, உங்களுக்கு எதிர்கொண்டுவருவதை விட அதிகமான ஆவிக்குரிய தசைகளுடன் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வதாகும்.
பவுல் எபேசியர் நிருபத்தை கண்ணுக்குப் புலப்படாமல், யாரும் கண்டிராத சாம்ராஜ்யங்களில் நடக்கும் ஆவிக்குரிய போரை குறித்து கவனத்தை ஈர்க்க மட்டுமல்ல, அதை தேவனோடு கிறிஸ்துவின் மூலமாக உறவுகொள்ளும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் உள்ளார்ந்த பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் நோக்கத்திலும் பெரிதாக உபயோகப்படுத்தியுள்ளார். எபேசியரில், பவுல் ஆவிக்குரிய சர்வாயுதவர்கத்தின் மிக முக்கியமான ஆனாலும் கவனிக்கப்படாமலிருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தை முன்னிலைப்படுத்துகிறார்: அதுவே ஜெபம்.
ஒரு அறிஞர் கவனித்தது போல, " எபேசியர் நிருபம் விகிதாசார அடிப்படையில் 55% திற்கும் மேலான ஜெபத்தை நேரடியாகக் குறிக்கும் வசனங்களை கொண்டுள்ளது" பவுலின் நீளமான நிரூபமாகிய, ரோமரைப் போலவே.அவர் நிறைய சமயங்கள் எழுதிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஜெபங்களையும் மேற்கொள்கிறார். அப்படி ஜெபிக்கும்போதோ... அவர் திறம்பட, வாசிப்பவர்கள் அவர் எதற்காக ஜெபிக்கிறார் என்பதை சரியாக தெரிந்துகொள்ளும்படியாக ஜெபிக்கிறார். அவர் ஜெபமானது அவர்களுடைய முழு வாழ்வின் போக்கையே மாற்றவல்லது என்று பவுல் அறிந்திருந்தார். ஆவிக்குரிய போர்க்களத்தில் வெற்றியும் ஜெபமும் பிரிக்கவியலாதவை.
எபேசியர் 1:18-21 மற்றும் 3:14-19ஐ வாசியுங்கள். பவுல் ஜெபம் செய்த எல்லா விஷயங்களிலும், நீங்கள் இன்று மிகவும் தேவையானதாக ஆண்டவரிடம் கேட்கக்கூடியது எது?
இந்த திட்டத்தைப் பற்றி
தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.
More