தேவனுடைய சர்வாயுதவர்க்கம்மாதிரி

The Armor of God

5 ல் 2 நாள்

எபேசிய விசுவாசிகள் அவர்களுடைய மிகுதியான சுதந்திரங்களாகிய ஆவிக்குரிய வளங்கள், ஆசீர்வாதங்கள், வல்லமை, மற்றும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளட்டும் என்று கேட்காமல் பவுல், அவைகள் அவர்களுடையது என்று உணர்ந்துகொள்ளட்டும் என்றே ஜெபித்தார். கிறிஸ்தவர்களாக, நம்மைப்போலவே, அவர்களும் ஏற்கனவே இவற்றை பெற்றிருந்தார்கள். ஆனாலும் இதை அவர்கள் உணரும்வரை, அதனால் என்ன நன்மை நிறைவேறியது?

உண்மையில், ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கம் என்று எபேசியர் 6 இல் பவுல் குறிப்பிடுவது அவர் அந்த நிருபத்தின் முதல் பாகத்தில் விளக்கியதை—மீண்டும்—வித்தியாசமான வழியில் குறிப்பிடுவதாகும். எவ்வாறு அவர்கள் தங்களிடம் உள்ளது என்று அவர்கள் அறியாததை "உடுத்திக் கொள்ளவோ" அல்லது "எடுத்துக் கொள்ளவோ" முடியும்? கொடுக்கப்பட்ட ஆவிக்குரிய வளங்களை பயன்படுத்துவதற்கான அவர்களின் முதல் படி— நம்முடைய முதல் படி—அவற்றை நாம் காணும்படியாக நம்முடைய ஆவிக்குரிய கண்களை திறந்திருப்பதாகும்.

2 இராஜாக்கள் 6 இல் வரும் எலிசா மற்றும் அவருடைய ஆவிக்குரிய பார்வை-குறைவுற்ற பணியாளரின் கதை எனக்கு முழுமையாக பிடித்த வேதாகம கதைகளில் ஒன்றாகும். கோபம்கொண்ட ஆராமின் ராஜாவுக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கும் நடுவில் நடக்கவிருக்கும் போரில் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

எலிசாவின் பணியாள் கண்ணாரப் பெற்றுக்கொண்டான். முதலில், எதிரியை மட்டுமே அவனால் காண முடிந்தது. அதனால் பயமும் வியாகூலமும் மட்டுமே அவனுடைய ஒரே பதிலாக அமைந்தது.

ஆனால் அவன் உடனடியாக ஆட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு ஆவிக்குரிய நிதர்சனத்திற்குள் ஒத்திசைந்தான்: அவன் என்றும் நினைத்துப்பார்த்திருக்காத அளவில் அதிகமாய் அவனிடத்தில் மற்றும் அவன் சார்பில் நடைபெறும் வேலைகளை அப்போதுதான் அவன் கண்டுகொண்டான். அவனுடைய மாம்சத்திற்குரிய கண்கள் காணக்கூடியவை அவற்றால் காணமுடியாதவைக்கு என்றும் ஈடில்லை. அவனுடைய பகையாளர்க்கு எதிராக தன்னுடைய பக்கத்தில் உள்ள வளங்களை அறிய அவனுக்கு உதவியது எலிசாவின் ஜெபம்.

நம்பிக்கையோடு இருக்கவும் வெற்றியடையவும், நீங்கள் அதை "காண"க்கூடியவராக இருக்க வேண்டும்.

எபேசியர் 1இல், தேவன் நமக்கு அருளிய ஈவுகளில் வெகு சிலவற்றையே பவுல் உச்சரிக்கிறார். மேலும் அதிகம் உண்டு, மற்றும் அவை ஒவ்வொன்றும் ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கம் மற்றும் ஆயுதங்களோடு குறிப்பாக இணைகின்றன. அவை எல்லாம் எவ்வாறு எதிரியை
வீழ்த்தும் நம்முடைய திறனோடு பொருந்துகிறது என்பதை அறிந்துகொள்ள முதல் முக்கிய கூறு தரிசனம். அவற்றை முற்றிலுமாக அடையாளம் கண்டுகொள்ள உங்களால் இயலவில்லையென்றால், அவற்றை பெறக்கூடிய தன்மை மற்றும் எதிரியோடு வெற்றிகரமாக போரிட அவற்றின் முக்கியத்துவத்தை அறியவில்லையென்றால், உங்களால் அதை பயன்படுத்தமுடியாது.

ஜெயம் இங்கே தொடங்குகிறது. இன்றே தொடங்குகிறது. அது தரிசனத்திற்கான ஜெபத்துடன் தொடங்குகிறது.

ஆகையால் பவுலோடு கூட இனைந்து ஆண்டவரிடம் சத்துருவின் செய்கைகளை தெரிந்துகொள்ள மட்டுமின்றி, அவனை உங்கள் வாழ்விலும் நிராயுதபாணியாக்கி வீழ்த்த தேவன் உங்களுக்கு கொடுத்ததை நீங்கள் காணும்படியாக உங்கள் கண்களை திறந்தருள வேண்டுமென்று கேளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Armor of God

தினந்தோறும், முழுநேரமும் உங்களை சூழ்ந்தபடி - கண்ணுக்கு புலனாகாத, கேள்விப்படாத, ஆனாலும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் உணரக்கூடிய ஒரு போர் சீற்றமடைகிறது. மிக அர்பணிப்புமிக்க, அந்தகாரமான சத்துரு ஒருவன் உங்களுக்கு முக்கியமென்று இருக்கும்: உங்கள் இருதயம், உங்கள் சிந்தனை, உங்கள் மணவாழ்க்கை, உங்கள் குழந்தைகள், உங்கள் உறவுகள், உங்கள் எதிர்ப்புத்திறன், உங்கள் கனவுகள், உங்கள் விதி போன்ற எல்லாவற்றிலும் அழிவை ஏற்படுத்த வகைதேடுகிறான். இருப்பினும் அவனுடைய போர்த்திட்டம் உங்களை நிராயுதபாணியாக எதிர்பாராதநிலையில் பிடிப்பதை சார்ந்துள்ளது. நீங்கள் அங்குமிங்குமாக தள்ளப்படுவதால் சோர்ந்தும் உங்கள் பாதுகாப்பு இல்லாமலும் பிடிபடுகிறீர்களென்றால், இந்த தியானம் உங்களுக்கானது. சத்துருவானவன் தருணத்திற்கேற்றபடி உடையணிந்த ஒரு பெண்ணை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பரிதாபமாக தோற்றுப்போகிறான். தேவனுடைய சர்வாயுதவர்க்கம், ஒரு விசுவாசியின் இருப்புகளின் வேதவிளக்கம் என்பதிலும் மேலாக, அதை உடுத்திக்கொண்டு தனித்த்துவமான போர்த் தந்திரங்களை உருவாக்கி ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ள உதவும் ஒரு செயல் திட்டமாகும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக பிரிசில்லா ஷிரேர் மற்றும் Lifeway கிறிஸ்தவ வளங்கள்-க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு www.lifeway.com/ஐ பார்வையிடுங்கள்