தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
மிஞ்சான்
ஐசக் நியூட்டர் பல கண்டுபிடிப்புகளைச் செய்தவர். அவருக்குப் பல பெருமைகளும் புகழும் கிடைத்தன. இங்கிலாந்து நாடு அவருக்கு சர் பட்டம் அளித்து கவுரவித்தது. ஆனாலும் அவர் மிகவும் தாழ்மையும் எளிமையுமானவராகவே இருந்தார். அவர் தனது உறவினர் ஒருவருக்கு எழுதிய கடித்தத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். “ஒரு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருக்கின்ற சிறுவனைப் போலத்தான் நான் உணருகிறேன். அவ்வப்பொழுது சாதாரணமாக இல்லாத சிறப்பான கூழாங்கற்களையும் சிப்பிகளையும் கண்டுபிடிக்கிறேன். ஆனால் உண்மை என்னும் பெருங்கடல் எனக்கு முன் முழுவதும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றது.” நிறை குடம் ததும்பாது என்னும் பழமொழியைப் போல பெரும் மனிதர்கள் தாழ்மையாக இருப்பதுடன் தங்களுக்கு அவசியமில்லாதவற்றில் தங்கள் தலைகளை நுழைக்கிறதில்லை.
தாவீது தன்னை இருமாப்பில்லாத இருதயம் உள்ளவராக, மேட்டிமையில்லாத கண்கள் உள்ளவராக, பெரியதும் தனக்கு மிஞ்சியவற்றில் நுழைக்காத தலையை உடையவராக இருப்பதாகச் சொல்கிறார். அவர் தன்னை ஒரு குழந்தைக்கு ஒப்பிடுகிறார். தன் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணுகிறார்.
மனித மனமானது சில சிறிய சாதனைகளிலேயே பெருமை கொள்ளக் கூடியதாகும். ஆனால் நாம் தான் நமது ஆத்துமாவை அடக்கி தாழ்மைப் படுத்த வேண்டும். நம்மைத் தாழ்த்தும் போது கடவுள் தமது கிருபையை நமக்குத் தருகின்றார். இப்படித் தாழ்மை இருக்கும் போது நாம் சாதித்துவிட்டுப் பெருமையைக் கடவுளுக்குக் கொடுப்போம். பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கும் தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குத் தன் ஆசீர்வாதங்களைத் தருகின்றார்.
சிந்தனை : சிறியவர்களாக இருந்து பெரிய விஷயங்களில் தலையிடுவது பெருமை. பெரியவர்களாக இருந்தும் சிறியவர்களைப் போல அடங்கியிருப்பது தாழ்மை.
ஜெபம் : ஆண்டவரே எனக்குத் தாழ்மையையும், உமக்கு அடங்கியிருக்கும் மனதையும் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org