தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
ப்ரீமியர் லீக்
ஐ பி எல் என்னும் பிரீமியர் லீக் என்னும் கிரிக்கெட் அணிகளில் அனைத்து நாட்டு வீரர்களும் இருப்பார்கள். அவர்களை குறிப்பிட்ட பிரபல நபர் அல்லது நிறுவனம் ஏலத்தில் எடுத்து விளையாடச் செய்வார்கள். ரசிகர்களைத் மகிழ்ச்சிப்படுத்தவும் பணம் செய்யவும் நல்ல ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ”அணிகளால் பிரிந்திருந்தாலும், ___________ என்னும் நிறுவனத்தால் ஒன்றாகியிருக்கிறோம்” என்று பல நாட்டு வீரர்களும் ஒரே அணியாக நின்று சிரிக்கும் படம் ஒன்று பெரிய விளம்பரமாக பட்டணங்களில் வைக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவ விசுவாசிகளும் பல ஆலயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பல ஊர்களையும், மொழிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இயேசுவால் ஒன்றாகியிருக்கிறோம்.
நாம் ஒன்றாக இருக்கும் சூழலிலும் இயேசு இருந்தால் அதில் பெரும் சிறப்பும் வித்தியாசமும் தெரியும். கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றிய சம்பவத்தை ஞாயிறு பள்ளியில் சொல்லியபின் இதிலிருந்து உனக்குப் புரிந்தது என்ன என்று கேட்டார் ஆசிரியர். ஒரு சிறுமி சொன்னாள், எப்போதுமே இயேசு கூட இருப்பது நல்லது என்றாள். அதிலும் விருந்து நடக்கும் போது இயேசு கூடவே இருப்பது நல்லது என்று சொல்லலாம். குறைவுகளில் அவர் அற்புதங்களைச் செய்வார். நிறைவுகளில் அவர் பிறருக்கு உதவி செய்ய நம்மைத் தூண்டுவார்.
ஆகவே முதலாவதாக கடவுளைத் தகப்பன் என்று அழைக்கிற சகோதர சகோதரிகள் ஒன்றாக இருப்பது முக்கியமானது. அதன் பின்னர் தான் அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கும் நாம் நன்மையும் இன்பமுமான கடவுளின் பிரசன்னத்தைப் பற்றிச் சொல்ல முடியும்.
சிந்தனை : சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது மிகவும் கடினமானது, ஆனால் அது நன்மையும் இன்பமுமாக இருக்கின்றது.
ஜெபம் : ஆண்டவரே உம்மை நேசிக்கிற சகோதர சகோதரிகளாக நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமையைக் காட்டவும், அதன் நன்மையையும் இன்பத்தையும் அனுபவிக்கவும் எனக்கு பாக்கியம் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org