தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 68 நாள்

வைரஸ்

குற்றங்களின் அரசி என்ற பெயரைப் பெற்ற அகதா கிறிஸ்டி எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் துப்பறியும் கதைகளை அதிகம் எழுதியிருக்கின்றார். அதில் பல கதைகளில் முக்கிய கதாபாத்திரமாக வருபவர் பாய்ராட் என்னும் துப்பறிவாளர் ஆவார். அவர் சொல்லும் பல மேற்கோள்கள் எனப்படும் பஞ்ச் டயலாக்குகள் சிறந்த கருத்துக்களைச் சொல்பவைகளாக இருக்கும். அதில் ஒன்று, “மனிதன் தன்னைப் பற்றியும் தனது ஆள்த்தன்மையைப் பற்றியும் உரையாடல்களில் பிறரிடம் சொல்லுவதற்கான வாய்ப்புக்களை ஒரு போதும் தவற விடமாட்டான். ஒவ்வொரு முறை அவன் பேசும் போதும் தன்னைப்பற்றிய விபரங்களை அவன் சொல்லிக் கொண்டே தான் இருப்பான். ஆகவே இரகசியத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒருவனுக்கு உரையாடலைப் போல ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.”

நமது வாழ்க்கையில் நாம் எத்தனை அடக்கி வைத்தாலும் அவைகளை ஆண்டவர் அறிந்திருக்கிறார். மேலும் நாம் நம்மைப் பற்றிய விஷயங்களை கடவுளிடம் ஜெபத்தின் மூலம் பேசலாம். அதனால் நம்மில் ஆண்டவருக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் எதுவும் இருக்கின்றதா என்பதைக் கண்டறிந்து நம்மை நித்திய வழியில் நடத்தும்படி ஆண்டவரிடம் கேட்கலாம். கேட்டு நம்மைத் திருத்திக் கொள்ளலாம். 

நமக்கேத் தெரியாமல் கடவுளுக்கு வேதனை உண்டாக்கும் வழிகள் நம் வாழ்க்கையில் இருக்கலாம். நம்மை நாமே அடிக்கடி வேதாகமத்தின் வெளிச்சத்தில் சோதித்துப் பார்க்கும் போது நம்மை சுத்தப்படுத்திக் கொள்ளவும் நேராக்கிக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கும்.

சிந்தனை : நாம் நேசிப்பவருக்கு வேதனை உண்டாக்க மாட்டோம். எது வேதனை உண்டாக்கும் என்பதை அதிக நெருக்கம் மட்டுமே நமக்கு வெளிப்படுத்தும்.

ஜெபம் : தேவனே...வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும். ஆமென்.

நாள் 67நாள் 69

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org