தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 72 நாள்

ட்யூஷன்

ஒரு இரவில் நாடோடிக் கூட்டம் ஒன்று தூங்குவதற்கு ஆயத்தமாகும் போது, அவர்களை ஒரு பெரும் வெளிச்சம் சூழ்ந்தது. அது கண்டிப்பாக தேவதூதர்களாகத் தான் இருக்கும் என்று நினைத்தார்கள். அவர்களிடம் ஒரு குரல் பேசியது. ”உங்களால் முடிந்த அளவுக்கு கூழாங்கற்களை எடுத்துக் கொண்டு போங்கள். நாளை இரவில் நீங்கள் மகிழ்ச்சியும், துக்கமும் அடைவீர்கள்.” அவர்கள் மிகவும் கோபமடைந்தார்கள். இந்த தெய்வீகக் குரல் ஏதாவது பெரிய இரகசியம் அல்லது பெரும் புதையலைப் பற்றிச் சொல்லும் என்று எதிர்பார்த்தால், சாதாரண வேலையைச் செய்யச் சொல்லியிருக்கிறதே என்று பேசிக்கொண்டார்கள். இருந்தாலும் அந்த தெய்வீகக் குரல் சொன்னது போல ஆளுக்கு ஒன்றிரண்டு கூழாங்கற்களை எடுத்துக் கொண்டு போனார்கள். அடுத்த நாள் அவர்கள் ஒரு சத்திரத்தில் தங்குவதற்காக இறங்கிய போது தங்கள் பைகளில் இருந்த சில கூழாங்கற்களை எடுத்துப் பார்த்தார்கள். அவைகள் வைரமாக இருந்தன. அவர்கள் தெய்வீகக் குரலுக்குக் கீழ்ப்படிந்து அதிகமான கற்களைப் பொறுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்கள், அவைகள் வைரங்களாக இருந்ததால் மகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

ஆண்டவர் நமக்குச் சொல்பவைகள் சில நேரங்களில் இன்பமானதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நாம் பின்னர் நம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது தான் அனைத்துமே நமது நன்மைக்காக என்பது தெரியும். நமக்குப் பிரியமானதைக் கடவுள் நமக்குச் செய்ய வேண்டும் என்று தான் நாம் விரும்புவோம், ஜெபிப்போம். ஆனால் தாவீது, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் என்றூம் என்னை செம்மையான வழியில் நடத்தும் என்றும் ஜெபிக்கிறார்.

சிந்தனை : கடவுளிடம் கற்றுக் கொண்டால் அவருக்குப் பிரியமானதையும், செம்மையான வழியையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜெபம் : உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. ஆமென்.

நாள் 71நாள் 73

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org