தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
அவசர போலீஸ் 101
ஜெர்மன் ஷெப்பர்ட் என்னும் நாய் வகைகளுக்கு நல்ல குணங்களைப் புகுத்தி அவற்றை கண் தெரியாதவர்களுக்கு உதவியாக மாற்றுவதில் ”பார்க்கும் கண்கள்” என்னும் அமைப்பு அதிக முயற்சிகள் செய்கின்றன. அந்த அமைப்பைத் தோற்றுவித்தவர் டோரதி ஹாரிசன் யூஸ்டிஸ் எனபவராவார். இது சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகம் பிரபலமானது. நீதிமொழிகள் 20:12 இல் காண்கிற கண், கேட்கின்ற காது ஆகிய இவைகள் இரண்டையும் கடவுள் உருவாக்கினார் என்ற வசனத்தின் அடிப்படையில் ஒரு புத்தகத்தை எழுதினார். முதன் முதலாக இருபது வயது மோரிஸ் ஃப்ராங்க் என்பவரை வழிகாட்டும் நாயுடன் சேர்த்துப் பழக்கினார். 1991 ஆம் ஆண்டுவரைக்கும் அவரது நிறுவனமானது பத்தாயிரம் நாய்களை பார்வையற்றவர்களுடன் இணைத்து பயிற்சி கொடுத்து உதவியிருக்கின்றது.
பார்க்கும் கண்கள் என்ற நிறுவனத்தின் பெயரானது பார்வையற்றவர்களுக்கு உதவியாக இருப்பது போலத் தான் இந்த வானத்தையும் பூமியையும் உருவாக்கின கர்த்தரின் பெயரானது நமக்கு உதவி செய்வதாக இருக்கின்றது. வானம் பூமி ஆகியவற்றைப் படைத்தவர் என்ற பெயரே ஆண்டவரின் வல்லமையை நமக்கு வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. பார்க்கும் கண்கள் என்ற பெயரில் ஒன்றும் இல்லை. ஆனால் அந்தப் பெயரில் இயங்கி வரும் நிறுவனமே உதவிகளைச் செய்கிறது. அப்படியே கடவுளின் பெயரில் மட்டும் மந்திர சக்தி இல்லை. ஆனால் அந்தப் பெயரைக் கொண்டிருக்கும் ஆண்டவரிடம் தான் அனைத்து வல்லமையும் இருக்கின்றது. நமது வாழ்விலும் கடவுளின் பெயருக்குப் பின் இருக்கும் கடவுள் உதவி செய்வது போல அவரது பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் பெயருக்குப் பின் இருக்கும் நாம் அவரது பெயரைப் பயன்படுத்தும் அளவுக்கு அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
சிந்தனை : நமக்கு சகாயர். சகாயம் செய்பவர். வானத்தையும் பூமியையும் உண்டாக்கியவர்.
ஜெபம் : ஆண்டவரே உமது பெயரைப் பயன்படுத்தும் தகுதியையும் பாக்கியத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org