தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
டபுள் ஆக்டிங்
இந்த வசனத்தில் இயேசுவைப் பற்றியும் யெகோவா தேவனைப் பற்றியும் தாவீது கூறுகின்றார். கர்த்தர் ஆண்டவர் ஆகிய இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கடவுளுக்கு உரிய எல்லா அம்சங்களும் இந்த உலகில் வந்து மனிதனாக இருந்த இயேசுவுக்கு இருந்தன. எல்லாம் அறிந்தவர் ஆண்டவர் என்றால் யோவான் 16:30 இல் இயேசு எல்லாவற்றையும் அறிந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர், மத்தேயு 28:20 உலகத்தின் முடிவு வரை உங்களோடு இருப்பேன் என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கின்றார். மேலும் இரண்டு பேராவது மூன்று பேராவது என் பெயரால் எங்கே கூடினாலும் அங்கே அவர்கள் நடுவில் இருப்பேன் என்றும் இயேசு வாக்குக் கொடுத்திருக்கின்றார் (மத்தேயு 18:20). ஆண்டவர் எல்லாம் வல்லவர், இயேசுவுக்கும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார் (மத்தேயு 28:18). கடவுள் நித்தியமானவர், இயேசுவும் நித்தியமானவர் என்பதற்கு யோவான் 1:1இல் ஆதியிலே வார்த்தையாகிய இயேசு இருந்தார் என்ற வசனம் ஆதாரமாக இருக்கின்றது. கடவுள் மாறாதவர், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்று எபிரெயர் 13:8 என்ற வசனம் உறுதிப்படுத்துகிறது.
இயேசுவே ஆண்டவர் என்பதை நாம் விசுவாசித்து ஏற்றுக் கொள்ளும் போது அவர் எங்கேயோ தூரத்தில் இருக்கும் ஒரு சக்தி அல்ல. நம்மைப் போல மனிதனாக இருந்ததால் நம்மைப் புரிந்து நமக்காக பரிந்து பேசுகிறவர் என்னும் உண்மை நமக்கு உறுதியையும் நம்பிக்கையும் தரும்.
சிந்தனை : இயேசு ஒரு மனிதனாக வந்ததால் மனிதர்களுக்கு கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாகியிருக்கின்றது.
ஜெபம் : ஆண்டவரே நீர் மனிதனாக வந்ததற்காக உமக்கு நன்றி. என்னைப் புரிந்து எனக்காகப் பரிந்து பேசுகிறதற்காக நன்றி. நீரே எனக்கு எல்லாம் என்று வாழ அருள் தாரும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org