தாவீதின் சங்கீதங்கள் மாதிரி

தாவீதின் சங்கீதங்கள்

73 ல் 54 நாள்

அடிக்கிற கை

தன் குழந்தையை எவ்வளவு தான் பெற்றோர் நேசித்தாலும் குழந்தை வளர்ந்து வருவதில் ஏற்படும் வலிகளையும், சிறு காயங்களையும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். குழந்தை கீழே விழுந்தால் காயம் ஏற்படும் வலி ஏற்படும் என்று சொல்லி நடக்காமலேயே குழந்தையை வைத்திருப்பது நல்லது அல்ல. குழந்தைக்கு வலி தெரியக்கூடாது என்று இடுப்பிலேயே இருபது வருடங்கள் தூக்கி வளர்த்தால் என்ன நடக்கும்? அந்த நபர் வளர்ந்த பின் காலகள் பலம் இழந்து, நடக்கப் பழகாததினால் நடக்கவே முடியாமல் போய்விடும். மாறாக குழந்தை நடக்கப் படிக்கும்போது கீழே விழுந்து சிறிது காயங்கள் பட்டாலும் பரவாயில்லை என்று மனதைக் கடினப்படுத்திக் கொண்டு பயிற்சி கொடுக்கும் பெற்றோரை யாரும் கல் நெஞ்சக்காரர்கள் என்று சொல்லுவதில்லை. இப்படித்தான் நம்மையும் கடவுள் வளரச் செய்கிறார்.

கடவுள் நம் மேல் பாரம் சுமத்தினாலும் நமது நன்மைக்காகவே அதைச் செய்கிறார் என்பதை நாம் புரிந்து ஏற்றுக் கொண்டோம் என்றால் நமது விசுவாசம் உறுதியாவதுடன் நமது எதிர்காலமும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நாம் சிறு தவறுகளைச் செய்து, வேதனைகளை அனுபவித்து, மக்களிடமிருந்து எதிர்ப்புகளைக் கண்டு வளரும் போது தான் நாம் முதிர்ச்சியுள்ள விசுவாசியாக வளர முடியும்.

தாவீது இஸ்ரவேல் மக்களின் வரலாற்றில் எப்படி எல்லாம் கடவுள் அவர்களை சிட்சித்து, சிறு சிறு கஷ்ட்டங்களை சகிக்கச் செய்து நடத்தி வந்தார். ஆனாலும் நம்மை இரட்சிக்கிறவர் அவர் தான் என்பதை இஸ்ரவேலர் அறிந்திருந்தனர்.

இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர் என்ற நம்பிக்கை தான் பிரச்சனைகளின் நடுவே உறுதியையும் அமைதியையும் தரக்கூடியதாகும்.
 

சிந்தனை : பரமதந்தை நமக்குச் செய்பவைகள் நமது நன்மைக்காகத் தான் என்பது தெரிந்தால் அவர் எதைச் செய்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

ஜெபம் : ஆண்டவரே எனக்கு வரும் பாடுகளில் உம்மை இன்னும் அதிகமாக நெருங்கிவர எனக்கு உதவி செய்யும். ஆமென்.

நாள் 53நாள் 55

இந்த திட்டத்தைப் பற்றி

தாவீதின் சங்கீதங்கள்

சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.

More

இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org