தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
சிம்பிள் ஆராதனை
துதி,ஆராதனை இவற்றிற்கான சரியான அர்த்தம் என்ன? பாட்டும் இசையும் மட்டும் தானா? ஆராதனை என்பது கடவுளின் பிரசன்னத்தில் நமக்குக் கிடைக்கும் அனுபவம் அல்ல. ஆனால் கடவுளின் பிரசன்னத்தில் இருக்கும் போது நம்மிடம் இருப்பதில் மிகச்சிறந்ததை ஆண்டவருக்குக் கொடுப்பது தான் ஆராதனை என்று வெப்பர் என்னும் எழுத்தாளர் தனது புத்தகத்தில் சொல்லுகிறார். கிர்க்கீகார்ட் அவர்கள் கிறிஸ்தவ ஆராதனை என்பது கடவுள் பார்வையாளராக இருக்கும் ஒரு நிகழ்ச்சி என்கிறார். இதில் சபை மக்களே நிகழ்ச்சி நடத்துபவர்கள். சபையாருக்கு முன்பாக நின்று அவர்களை நடத்துபவர்களாகிய, போதகர், பிரசங்கியார், பாடகர் குழுக்கள் ஆகியோர் இவர்களைத் தூண்டி உற்சாகப்படுத்துபவர்கள் என்று சொல்கிறார்.
ஆனால் இசை மட்டும் தான் ஆராதனை என்றும் பாடுகின்றவர்களும் ஆராதனையை நடத்துகிறவர்களும் தான் நிகழ்ச்சியை நடத்துகிறவர்களாகவும் சபை மக்கள் பொழுது போக்குவதற்காகவும், கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தான் ஆராதனைகளுக்குப் போவதாகவும் இந்தக் காலத்து நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொழுது போக்கில் தவறு இல்லை. கடவுளிடமிருந்த் நன்மைகளை எதிர்பார்ப்பதிலும் தவறு இல்லை. ஆனால், கடவுள் நம்மிடம் ஆராதனையை நாம் அவருக்குக் கொடுக்காமல் அர்த்தத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.
உண்மையான துதி ஆராதனை என்பது ஒவ்வொரு விசுவாசியும் பங்கு பெறும் ஆராதனையாகும். இதைப்பற்றித் தான் தாவீது இவ்வாறு சொல்கிறார், “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.”
சிந்தனை : வார்த்தையைவிட வாழ்க்கையும், இசைப் பாடலைவிட கடவுளுக்குக் கீழ்ப்படிதலுமே சிறந்த ஆராதனையாகும்.
ஜெபம் : துதிகளின் பாத்திரரான ஆண்டவரே, என் வாழ்க்கையும் வார்த்தையும் உம்மைத் துதிக்கும் ஆராதனையை ஒவ்வொரு நாளும் நான் நடத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org