தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
டி வி
திருமதி மாரி வின் அவர்கள் தொலைக்காட்சியின் முன் தன் குழந்தையை வைத்துவிடுவார். குழந்தையைக் கவனிக்கும் இலவச ஆயாவாக டி வியை வைத்திருந்தார் அவர். ஆனால் தனது குழந்தைகள் புத்திக்கூர்மை இல்லாதவர்களாக மாறியதை அவர் கவனித்தார். இதன் அடிப்படையில் ஒரு புத்தகம் எழுதினார். இதில் டி வியை நிறுத்துவது எப்படி என்று அறிவுரைகள் கொடுக்கின்றார். தெற்கு ஆஃப்ரிக்காவில் தொலைக்காட்சி 1976-இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக பாரம்பரியமாக இருந்து வந்த பல பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளும் தகவல் பரிமாற்றம் குறைந்து போனதற்கு வடக்கு ட்ரான்ஸ்வால் பகுதியிலுள்ள பிய்ட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த ஒரு சம்பவம் உதாரணமாக இருக்கின்றது. அங்கே ஒரு வயதான பெண்மணி தனது வீட்டு தொலைக்காட்சியின் முன் இறந்து போய் அப்படியே உட்கார்ந்திருந்தார். அவரது கணவனுக்கோ பிள்ளைகளுக்கோ அது மூன்று நாட்கள் வரை தெரியாமல் இருந்திருக்கிறது. தொலைக்காட்சி உடலில் கொழுப்பை 45 சதவீத அளவுக்கு அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் உடலுக்குப் பயிற்சியே இல்லாமல் போவதுடன் விளம்பரங்களில் வரும் கொழுப்புள்ள பொருட்களை வாங்கித்தின்னும் சோதனையும் ஏற்படுகிறது.
தொலைக்காட்சியின் தீங்கு எனக்குள் புகாதபடி பார்த்துக் கொள்ள முடியுமா? அதைவிட கண் முன்பு டிவியே இல்லாமல் பார்த்துக் கொள்வது எளிதா? இந்தக் காலத்தில் இப்படிச் செய்வது முடியுமா? தீங்கான சானல்களை விலக்கலாமா? டிவியையே விலக்கலாமா? என்றெல்லாம் பல கேள்விகள் இருந்தாலும் நமக்கு இருக்கும் மனசாட்சி, வேதாகமம், பரிசுத்த ஆவியானவர், பெரியவர்களின் உதவியை நாடி நாமே முடிவு எடுப்பது நல்லது.
சிந்தனை : தொலைக்காட்சியைப் பற்றிய தொலை நோக்கு சிந்தனை நமக்கு இருக்க வேண்டும்.
ஜெபம் : இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org