தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
மாம்சம்
1983 ஆம் ஆண்டில் சான் ஃப்ரான்சிஸ்கோவின் பெரும் மருத்துவமனையில் 393 வியாதியஸ்தர்களுக்காக மக்களை ஜெபம் செய்ய வைத்தார்கள். இன்னொரு வியாதியஸ்தர்களுக்கு எந்த ஜெபமும் செய்யப்படாமல் இருந்தது. வியாதியஸ்தர்களுக்கோ மருத்துவர்களுக்கோ யாருக்காக ஜெபங்கள் செய்யப்படுகின்றன என்பதே தெரியாமல் இருந்தது. ஜெபிக்கின்றவர்களும் இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளாக இருந்தனர். அவர்கள் யாருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. விளைவு : யாருக்காக ஜெபிக்கப்பட்டதோ அவர்களுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படவில்லை. மாரடைப்பு மற்றும் நிமோனியாக் காய்ச்சல் அவர்களுக்கு அதிகமாக ஏற்படவில்லை. இந்த ஆராய்ச்சி அமெரிக்க மருத்துவ குறிப்பேடு என்னும் பிரபல இதழில் 1989இல் வெளியானது. இந்தப் பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியானதே மிகவும் முக்கியமானதாகும்.
மாம்சமான இந்த உலகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாம்சம் இருப்பதால் நமக்கு பலகீனங்கள் உண்டு. எல்லாவற்றையும் நம்மால் சாதித்துவிட முடியாது. கடவுளின் உதவி கண்டிப்பாக நமக்குத் தேவை.
ஜெபத்தைக் கேட்கிறவரே அறிவியல் முறைப்படி ஜெபத்துக்கான பதில்களை நூறு சதவீதம் நிரூபிக்க முடியாது என்றாலும் அவரை நம்புகிற பலருக்கு ஜெபத்தின் வல்லமை என்ன என்பது தெரியும்.
வருவார்கள் விசுவாசம் இருப்பவர்கள் ஆண்டவரிடம் தான் போக வேண்டும்.
சிந்தனை : ஜெபத்தின் மேல் நம்பிக்கை குறையும் போது ஜெபத்தின் வல்லமை அதிகரிக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.
ஜெபம் : ஆண்டவரே நீர் ஜெபத்தைக் கேட்கிறவர் என்பதை என் வாழ்வில் நிரூபித்துக் காட்டும். உம்மிடமே நான் வருகிறேன். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org