முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி
ஆன்மீக பழக்கம்: ஓர் எச்சரிக்கும் வார்த்தை
தம்முடைய பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன், இயேசு 40 நாட்கள் தனிமையில் இருக்க விருப்பத்துடன் வனாந்தரத்திற்குச் சென்றார். இது பிசாசு அவர் மீது வீசிய சோதனைகளை எதிர்ப்பதற்கும், கடவுள் அவருக்காக வைத்திருந்த அழைப்பை அடி எடுத்து. நுழைவதற்கும் அவரை தயார்படுத்தியது. ஆரோக்கியமான ஆன்மீக பழக்கங்களை உருவாக்குவது நாமும் அவ்வாறே செய்ய உதவும்.
தவக்காலத்தில் நீங்கள் ஒவ்வொரு நாளும் கடவுளிடம் நெருங்கி வருவதால், இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் பயிற்சி செய்வது உங்கள் தினசரி மற்றும் வாராந்திர இசைவின் இயல்பான பகுதியாக மாறும்
அவை இயற்கையான இசைவுகளாக மாறும்போது, நீங்கள் அவற்றைப் பயிற்சி செய்வதால் உங்கள் வாழ்க்கை வித்தியாசமாக இருப்பதை நீங்கள் காண தொடங்குவீர்கள். நம்பிக்கையும் இரட்சகரும் தேவைப்படும் சோர்வுற்ற உலகிற்கு உங்கள் மூலம் அவருடைய மகிமையைக் காண்பிக்கும் வகையில், உங்கள் இருதயத்தை மாற்றுவதற்கு கடவுளுக்கு நீங்கள் இடத்தை உருவாக்குகிறீர்கள்.
ஆனால் நீங்கள் இவற்றைப் பயிற்சி செய்யும்போது, ஆன்மீகப் பழக்கவழக்கங்களே இறுதி இலக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுளுடன் ஆழமான நெருக்கத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். தியாகத்தை விட கீழ்ப்படிதல் சிறந்தது என்பதை கடவுளுடைய வார்த்தை தெளிவாக்குகிறது. இதன் பொருள் எப்போது நாம் எதை தியாகம் செய்தாலும், அது தாழ்மையான சரணடைந்த இடத்திலிருந்து இருக்க வேண்டுமே அன்றி-அரை மனதுடன் கடமை உணர்வினால் அல்ல. அதுபோலவே, ஆன்மீக பழக்கவழக்கங்கள் கடவுளுடைய அன்பில் அடிபணிந்த கீழ்ப்படிதலைப் பிரதிபலிக்கும்போது அதற்கு மதிப்பு சேர்க்கின்றது.
எனவே நீங்கள் உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக்கிழமைக்குத் தயாராகும்போது, நீங்கள் சுயமாக ஆன்மீக ரீதியில் வளர வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவருக்கு முன் குறைபாட்டுடன் வருவதற்கு உங்களுக்கு அனுமதி கொடுங்கள், ஏனென்றால் உங்கள் பலவீனத்தில் கடவுளின் வல்லமை பரிபூரணம் ஆகிறது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம்.
More