முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி
ஆன்மீக பழக்கம்: உபவாசம்
"உண்ணாவிரதம்" என்று நீங்கள் நினைக்கும் போது, உங்கள் மனசில் என்ன வருகிறது?
மக்கள் விருப்பத்துடன் பட்டினி கிடப்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். உலர்ந்த ரொட்டியில் வாழும் ஒரு துறவியை நீங்கள் சித்தரிக்கலாம். அல்லது நீங்கள் உண்ணாவிரதத்தைப் பற்றி... எப்போதுமே சிந்திக்க விரும்பாத ஒருவராக இருக்கலாம்.
இயேசு 40 நாட்கள் வனாந்தரத்தில் உபவாசம் இருந்தார். அவருடைய சீடர்களுடனான உரையாடல்களின் அடிப்படையில் அவர்களும் உபவாசத்தை ஒரு பழக்கமாக கடைபிடிப்பார்கள் என்றே அவர் ஊகித்தார் என தோன்றும்.
ஆனால், வேண்டுமென்றே, நமக்கு உடனடி திருப்தியைத் தரும் விஷயங்களை நீக்கி, கடவுளைக்கு செவிமடுக்க நம் வாழ்வில் இடத்தை உருவாக்குவது அசௌகரியமாக உணரலாம்-குறிப்பாக நம் உலகம் இன்பத்தை மகிமைப்படுத்துவதால்.
உபவாசம் ஏன் முக்கியம் என்பதற்கான 3 காரணங்கள் இங்கே:
உண்ணாநொன்பு கடவுளின் பிரசன்னத்தை நாம் அனுபவிப்பதை எது தடுக்கிறதோ அதை பட்டினி போடுகிறது.நம் வாழ்வில் நள்ளிரவு மட்டுமீறிய செயல் மற்றும் சமூக வலைதள திரையுருட்டல் மூலம் மூழ்க நினைக்கும் சில பகுதிகளுக்கு நம்மை கவனம் செலுத்தத் தூண்டுகிறது. அந்த செயலாக்கத்தினால், நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயேசுவை சார்ந்திருக்க கற்றுக்கொடுக்கிறது.
உண்ணாவிரதம் நாம் விரும்பும் ஒன்றை விட்டுவிட்டு அதைவிட நாம் நேசிக்கும் ஒன்றிற்கு இடம் கொடுக்க நம்மை அழைக்கிறது.உணவைப் போல நீங்கள் விரும்பும் ஒன்றை விட்டுக்கொடுப்பது கடினமாகவும் சங்கடமாகவும் இருந்தாலும், அது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும், ஏனென்றால் உண்மையான ஆனந்தம் இயேசுவிடமிருந்து வரும்போது மட்டுமே கிடைக்கும்.
உபவாசம் பெரும்பாலும் முன்னேற்றத்திற்கு முன் வருகிறது. 10 கட்டளைகளைப் பெறும்போது மோசே 40 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், டேனியல் 3 வாரங்கள் உபவாசம் இருந்தார், பின்னர் ஒரு தரிசனத்தைப் பெற்றார், இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார், பின்னர் பிசாசின் சோதனைகளை வென்றார். இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உண்மையுள்ள தியாகத்தின் மறுபக்கத்தில் கடவுள் தெளிவு, வலிமை மற்றும் முன்னேற்றத்தை வழங்கினார்
நடவடிக்கை எடுங்கள்: 24 மணிநேர உண்ணாவிரதத்தை முடிக்க முயற்சிக்கவும். நீங்கள் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றால், இந்தப் பயிற்சியை எளிமையாக வைத்திருங்கள்-இங்கே முடிப்பது மட்டுமே குறிக்கோள். உண்ணாவிரதத்தின் போது நீங்கள் சோர்வடையத் தொடங்கினால், அந்த சோர்வை கடவுளிடம் பேசுவதற்கும், அவர் சொல்வதைக் கேட்பதற்கும் ஒரு வாய்ப்பாக மாற்றுங்கள். நீங்கள் விரதத்தை முடித்தவுடன், இந்த நேரத்தில் உங்களுக்கு பளிச்சென்று தெரிந்தவற்றை எழுதி வையுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம்.
More