முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி
ஏன் தவக்காலம்?
சிறிது நேரம் நிறுத்திவிட்டு வெளியே பார்க்கவும். நீங்கள் என்ன காண்கிறீர்? உங்களை புன்னகை செய்ய வைப்பது எது?
நீங்கள் இப்போது விவரித்தது எதுவாக இருந்தாலும், இதைப் பற்றி சிந்தியுங்கள்: நீங்கள் பார்த்தது எப்பொழுதும் இருந்தது - நீங்கள் இடைநிறுத்தி அதை கவனிப்பதற்காக அது காத்திருந்தது.
அதுதான் தவக்காலத்தின் அடிப்படை நோக்கம்: வாழ்க்கையின் பொறுப்புகளின் நடுவில் எப்போதுமே இருப்பதை ஒன்றை பாராட்டுவதற்கான இடத்தை உருவாக்குவது - கடவுளின் பிரசன்னம்.
தவக்காலம் என்பது உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக்கிழமை முன்தைய 40 நாட்கள் ஆகும். இயேசு வனாந்தரத்தில் இருந்த 40 நாட்களின் அடிப்படையில், தவக்காலம் என்பது கடவுளின் குரல் மற்றும் அவரது தியாக அன்பைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாகும். தவக்காலம் உண்மையில் பைபிளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கி. பி 325 இல் நைசியா கவுன்சிலில் இது விவாதிக்கப்பட்டது, ஏனெனில் இது கிறிஸ்தவர்கள் புதிய தொடக்கங்ளுடன் இனைப்புற்ற வசந்த காலத்திறகுள் நுழையும் தருவாயில் அவர்கள் பிரதிபலிக்கவும் மனந்திரும்பவும் ஒரு சந்தத்தை வழங்கியது.
தவக்காலத்தின் நோக்கம் உங்கள் வாழ்க்கையை "சிறந்ததாக" ஆக்குவது அல்ல, ஆனால் உங்கள் வாழ்க்கையை மிக முக்கியமானவற்றில் மையப்படுத்துவதே: உங்களை உருவாக்கி உங்களுக்காக இறந்தவர். நீங்கள் இதைச் செய்வதற்கான வழிகளில் ஒன்று ஆன்மீகப் பழக்கங்களைப் பயிற்சி செய்வதாகும்.
நீங்கள் உயிர்த்தெழுதல் ஞாயிற்றுக்கிழமைக்குத் தயாராகும்போது, இந்தப் பருவத்தில் நீங்கள் கடைப்பிடிக்கக்கூடிய சில ஆன்மீகப் பழக்கவழக்கங்களை ஆராய்வோம், மேலும் வரும் ஆண்டுகளில் உங்கள் அன்றாட வாழ்க்கையின் பகுதியாய் ஒன்றை உருவாக்குவோம்.
ஒருசேர, நாம் முக்கியமான விஷயங்களுக்கு இடம் கொடுப்போம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம்.
More