முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி
ஆவிக்குரிய பழக்கங்கள்: தாராள மனப்பான்மை
உங்களது மிகவும் மதிப்புமிக்க உடைமை எது? அது நீங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்த கட்டின வீடாக இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பிய ஒருவருடன் நீங்கள் செலவழித்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கலாம். அல்லது அது ஒரு நண்பரின் அர்த்தமுள்ள பரிசாக இருக்கலாம்.
நமது "பொருட்களுக்கு" நாம் அளிக்கும் மதிப்பு மற்றும் முக்கியத்துவம், நமது உணர்ச்சிகளுடன் ஒன்றுபட்டது. நாம் மிகவும் விரும்பும் விஷயங்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது உண்மையான முன்னுரிமைகளை வெளிப்படுத்துகிறது.
இயேசுவின் சிலுவை மரணம் தேவனின் தாராள மனப்பான்மைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். நம்மால் அவருக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்திருந்தும், தேவன் தம்முடைய மிகப்பெரிய பொக்கிஷத்தை - அவரது ஒரே மகனை- நமக்காகக் கொடுக்கத் தயங்கவில்லை. மேலும் அந்த தியாகச் செயலின் மூலம், தாராள மனப்பான்மை எப்படி இருக்கும் என்பதை அவர் நிரூபித்தார்: நம்மிடம் இருப்பதை மனமுவந்து அளிப்பதன் மூலம் மற்றவர் செழிக்க முடியும், அது செயல்பாட்டில் நமக்கு வலியை ஏற்படுத்தினாலும் கூட.
நிதி கொடுப்பதினால் மட்டுமே நமது தாராள மனப்பான்மையை காட்ட முடியாது. தாராளமாக வாழ்வது என்பது, தேவன் நமக்குக் கொடுத்த பரிசுகளின் மூலம் அவர் விரும்பும் எதையும் செய்ய முடியும் என்பதை நாம் ஒப்புக் கொண்டு வாழ்வதில் உள்ளது. உங்கள் மூலம் தேவனை கிரியை செய்ய நீங்கள் அனுமதித்தால், உங்களின் கிரியைகளின் மூலம் நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், அவர் உங்களிடம் நெருங்கி வருவார். தாராள மனப்பான்மை ஒரு நன்றியுள்ள மற்றும் நம்பிக்கையான இதயத்திலிருந்து வரும் நற்கிரியை, மேலும் உங்களிடம் உள்ளதைக் கொண்டு நீங்கள் தேவனை நம்பும்போது, அவர் உங்களை மேலும் நம்பி மேன்மையானதை ஒப்படைக்கத் தொடங்குகிறார்.
இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நடந்தால், நீங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து, கட்டுப்பாட்டில் இருப்பவரை நீங்கள் அறிவீர்கள் - மேலும் அவர் உங்கள் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவார்.
நடவடிக்கை எடு: இயேசுவின் மிகவும் பிரபலமான அற்புதங்களில் ஒன்று, ஒருவர் கொடுத்த சில அப்பங்கள் மற்றும் மீன்களில் இருந்து அதிகப் பலன் கொண்டது. நீங்கள் என்ன கொடுக்க போகிறீர்கள்? உஙகளிடம் உள்ளதை ஏதாவது ஒரு வழியில் முதலீடு செய்யக்கூடிய இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். சிறியதாகத் தொடங்குங்கள் அல்லது பெரியதாகச் செல்லுங்கள். ஆனால் இன்றே தொடங்குங்கள்.
இந்த திட்டத்தைப் பற்றி
தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன் பிறகும் தயார்படுத்த உதவும் ஐந்து ஆன்மீகப் பழக்கவழக்கங்களை கண்டறியலாம்.
More