நீங்கள் பிரியத்திற்குரியவர்கள்மாதிரி

You Are Loved

4 ல் 4 நாள்

தேவனை நேசிக்கவும் பிறரை நேசிக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறோம்

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். (ரோமர் 12:9)

இயேசு பழைய ஏற்பாட்டின் மொத்த பிரமாணங்களையும் பிரதான கட்டளையாக தேவனை நேசிக்கவும் இரண்டாவது நம்மை நேசிப்பது போல பிறரை நேசிக்கவும் கட்டளையிட்டார் (மத்தேயு 22:37-40). “பிறர்” என்னும் சொல் நம் வீட்டிற்கு அருகில் உள்ளோரை மாத்திரம் குறிப்பதல்ல. பிறர் என்பது நீங்கள் சந்திக்கும் யாவரும் அல்லது உங்களால் யாருடைய வாழ்வில் நல்ல தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அனைவரும். நம்மை நாம் நேசிப்பது மிகவும் சுலபம். நமது தவறுகளை நாம் கவனிக்க தவறுகிறோம் மேலும் நாம் செய்யும் நன்மையில் அதிக கவனம் வைக்கிறோம். ஆனால் இதே போல் பிறை நேசிப்பது நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.

உண்மையில் நாம் தேவ அன்பையும் சுவிசேஷம் சொல்லும் நல்ல செய்தியும் புரிந்து கொள்வோமானால் எல்லாருடனும் அந்த அன்பை பகிர்ந்து கொள்வதே நம் நோக்கமாய் இருக்கும். இன்றைய பகுதி மற்றோருக்கு எப்படி அன்பையும் மன்னிப்பையும் தயவையும் காண்பிப்பது என்ற உதாரணங்களால் நியாய பிரமாணங்களால் நிறைந்துள்ளது. இவற்றில் எந்த கட்டளை உங்களுக்கு சவாலாக இருக்கிறது?

நம் சாக்குபோக்கு சொல்லும் முன், நமக்காக தேவன் மரணம் வரை சென்றதை மறக்க வேண்டாம், நம்மை நேசிப்பதற்காக சிலுவை மரணம் வரை சென்று இருக்கிறார். தேவன் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் ஜீவ பலியாக அழைத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள் (ரோமர் 12:1)! மற்றொரை நேசிப்பது சுலபமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் அதை செய்யவே தேவன் விரும்புகிறார். மற்றோருக்காக ஜெபிக்க ஆரம்பியுங்கள், அது உங்கள் கோபத்தை குறைக்கும், சாக்கு போக்குகளை மேற்கொள்ள உதவும் மேலும் தேவ அன்பை காண்பிப்பதற்கான கதவுகளை திறக்கும். 

நீங்கள் ஜெபிக்கும் போது, மற்றவரை நேசிப்பதற்கு உதவும் படி நம்முடைய நேச பிதாவிடம் கேளுங்கள். 


இந்தத் திட்டம் உங்களை ஊக்குவித்திருக்கும் என்று நம்புகிறோம். டூஆனே லூயென்ஸ் போன்ற மற்ற எழுத்தாளர்கள் எழுதிய திட்டங்களை வாசிக்க கீழுள்ள இணைப்பிற்கு சென்று பாருங்கள் Words of Hope .

வேதவசனங்கள்

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

You Are Loved

தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நம்பிக்கையின் வார்த்தை எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு: https://www.woh.org/youversion