நீங்கள் பிரியத்திற்குரியவர்கள்மாதிரி

You Are Loved

4 ல் 1 நாள்

அன்பே பிரதானமானது

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. (யோவான் 15:12)

வாழ்க்கையின் மர்மங்களைப் பற்றி மக்கள் புதிரிட்டு கொண்டிருக்கையில், ஆழமான கேள்விகளில் ஒன்று ஏன் ஏதாவாது இருக்கிறது.ஒன்றுமில்லாமல் இருந்திருக்கலாமே ஆனால் ஏன் ஏதோ ஒன்று இருக்கிறது? வேதத்தின் ஒரு சொல் பதில்- அன்பு. தேவ அன்பு என்ற வல்லமையே அண்டசராசரத்தையும் படைத்தது. தேவ அன்பே நீங்களும் நானும் உருவாக்கப்பட்டதிற்கு காரணம், நாம் இந்நொடி வரை மூச்சு விடுவதற்கு காரணமும் அதுவே. அன்பு தேவனுடைய இயல்பான குணம், அதுவே மக்களின் இயல்பான குணமாக இருக்க வேண்டும் என்பதே தேவ விருப்பம். அன்பே மனித வாழ்விற்கான முக்கிய காரணம்.

இயேசு மேல்வீட்டறையில் தன் சீஷர்களோடு சிலுவையில் அறையப்படும் நாளுக்கான முந்தைய இரவில் பேசிய வார்த்தைகள் தம்மைப் பின்பற்றுபவர்களுக்க கொடுக்கப்பட்ட ஒரு வகையான கடைசி விருப்பமாகவும் சாட்சியாகவும் இருந்தன. அவர் கொடுத்த கட்டளையின் மையக்கருத்து சுருக்கமானது எளிதானது: “நான் உங்களை நேசித்ததைப் போல நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள்.”

வேதம் மிகத்தெளிவாக காண்பிக்கிற காரியங்களில் ஒன்று நம் வாழ்வின் வெற்றி கிறிஸ்துவின் அன்பு உடையவர்களா இல்லையா என்பதைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. மற்ற வரங்கள் மற்றும் திறமைகளைக் கொண்டு தீர்மானிக்கப்படாது, அன்பு இல்லாமல் வெற்றி என்று எண்ணப்படுகிற மற்ற காரியங்கள் வெறுமையாக எண்ணப்படும். மிகப் பெரும் இறையியலாளரான கார்ல் பெத் சொல்வதைப் போல, உங்கள் வாழ்வின் சாதனைகள் எல்லாம், அன்பு இல்லாவிடில், முன் எந்த ஒரு எண்ணும் இல்லாத தொடர் பூஜ்ஜியங்களைப் போன்றது: எவ்வளவு நீளமாக இருந்தாலும், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அப்படியானால் உண்மையான அன்பு எப்படி இருக்கும்? அது இயேசுவைப் போல இருக்கும், நிச்சயமாக. 

நீங்கள் ஜெபிக்கும்போது, தேவனைப் போல நேசிக்க அவரிடம் உதவி கேளுங்கள். 

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

You Are Loved

தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக நம்பிக்கையின் வார்த்தை எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு: https://www.woh.org/youversion