நீங்கள் பிரியத்திற்குரியவர்கள்மாதிரி
தேவனின் பொறுமையான அன்பு
ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்திலே அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி,. (ஓசியா 2:14)
நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, என் வகுப்பில் உள்ள மாணவன் ஒருவன் அவன் விரும்பிய பெண் தன்னை நேசிப்பதாக சொல்லும் வரை தான் மூச்சு விடப் போவதில்லை என்று சத்தியம் செய்தான். அப்படியே அவன் மூச்சை இழுத்து பிடித்ததும் அவன் முகம் சிவந்து போனதை பார்த்து பயந்து, அந்தப் பெண் உளறினாள், “சரி! நான் உன்னை விரும்புகிறேன்!” என்று. சொல்லத் தேவையில்லை, அந்த “உறவு” நீண்டநாள் நீடிக்கவில்லை.
ஓசியாவில் எழுதப்பட்டுள்ள இந்த அழகான பத்தியில், தேவ ஜனங்கள் மற்ற தெய்வங்களை பின்பற்றிப் போனபோது, தேவன் அவர்களை விட்டுக்கொடுக்கவில்லை என்று வாசிக்கிறோம். ஆனால் தன்னை நேசிக்கும்படி வற்புறுத்தாமல், தேவன் அவர்களுக்கு நயங்காட்டி, அவர்களோடு பட்சமாய் பேசுவேன் என்று சொல்கிறார், மேலும் நம்பிக்கையற்ற சூழலில் நம்பிக்கையை தருவேன் என்கிறார். இதன் மூலமாக, அவர்கள் ஒருநான் தேவனை "மணவாளனே" என்றழைப்பார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார்(வ 16). இதுவே கிறிஸ்துவினுடைய வாக்ககு. இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, நமக்கும் தேவனுக்கும் இடையேயான திரை கிழிக்கப்பட்டது. நாம் முற்றிலுமாக மன்னிக்கப்பட்டோம், நம்முடைய முந்தைய பாவங்கள் மறக்கப்பட்டன. நம்பிக்கையின் கதவுகளை ஆண்டவர் அகலத் திறந்துவிட்டார், நம்முடைய அன்பை வற்புறுத்திக் கேட்கும் எஜமானன் அல்ல, ஆனால் நம்மோடு உறவாட விரும்பும் அன்பான ஆண்டவர் என்று காண்கிறோம். நம் மீது திணிக்கப்பட்ட உறவு அல்ல, மாறாக நாம் விரும்பும் ஓர் உறவு ஏனெனில் அவர் தனது அன்பின் ஆழத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக காண்பித்துவிட்டார்.
இன்று, தேவனது நீடிய பொறுமையுள்ள அன்பை சற்று நினைத்து பாருங்கள். நீங்கள் அவரிடம் அன்பு கூற வேண்டும் என அவர் வற்புறத்தவில்லை, ஆனால் எப்போதுமே அவர் உங்கள் அன்பை ஆவலோடு எதிர்பார்க்கிறார், உங்களை ஆரத் தழுவிக்கொள்ளும்படி அவருடைய கரங்கள் நீட்டப்பட்டே இருக்கிறது.
நீங்கள் ஜெபிக்கும்போது, நமது உண்மையுள்ள தெய்வத்திடம் அவரது அன்பிற்காக நன்றி சொல்லுங்கள். அவர் உங்களை நேசிப்பது போல நீங்களும் மற்றவர்களை நேசிக்க தேவனிடம் உதவி கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்களை எங்கேயிருந்தாலும், கர்த்தர் உங்களை நேசிக்கிறார்! இந்த மாதம், அன்பைக் கொண்டாடும் தருணத்தில், எந்த அன்பைக் காட்டிலும் தேவ அன்பே சிறந்தது என்பதை மறந்து விடாதிருங்கள். இந்த நான்கு நாள் திட்டத்தில், தேவ அன்பில் உங்களை அமிழ்த்திக் கொள்ளுங்கள்.
More