உணர்ச்சி சிக்கல்களிலிருந்து பின் திரும்புவதுமாதிரி
இந்த நாட்களில் மக்கள் சந்திக்கும் முக்கிய மன சஞ்சலங்களில் ஒன்று மற்றவர்கள் என்னை குறித்து என்ன யோசிக்கிறார்கள் என்கின்ற இணை சார்பு மனப்பான்மைதான். ஒரு உறவில் மாத்திரம் இதை புரிய வைக்க அநேக பதங்கள் இருக்கின்றன - மக்களை திருப்தி படுத்துவது, சமூக ஊடங்களின் அடிமைத்தனம். ஆனால் முதலில் இந்த இணை சார்பு மனப்பான்மையை புரிந்து கொள்வோம்.
இணை சார்பின் மனப்பான்மை ஒரு சமாளிக்கும் செயல், அதன்மூலம் ஒருவர்-தவறாக-அவர் உணரும் ஒரு குறையை கையாள முயலுகிறார். ஒரு வேளை சுய மரியாதையின் குறைப்பாடோ தள்ளப்பட்டுவிடுவோமோ என்கிற பலமான உணர்வுகளோ இருக்கலாம். எது எப்படி என்றாலும், இணை சார்பு என்பது ஒரு நபரையோ நபர்களையோ உபயோகித்து உடைந்ததை சரிசெய்ய முயலும் செயல். மக்களை சார்ந்து இருக்கும் தன்மை என்று நான் அதை அழைக்கிறேன்.
தேவன் மாத்திரமே நம்முடைய தேவைகளை சந்திக்க வல்லமையும் திறனையும் கொண்டிருக்கிறார். அவரிடம் திரும்புவதற்கு முன்பு மற்றவர்களிடம் உதவிக்கு திரும்பும்போதுதான் பிரச்சனை துவங்குகிறது. அவருடைய வார்த்தை முழுவதிலும், எவ்வாறு தேவன் மக்களை மற்றவர்களின் ஜீவியங்களில் எவ்வாறு உதவுகிறார் என்று பார்க்கிறோம். ஆனால் தேவன் நாம் மக்களையும் பொருட்களையும் நம்பி அவருடைய இடத்தை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதை விரும்புகிறார் என்று ஒரு இடத்திலும் வாசிப்பதில்லை. சொல்லப்போனால், அதற்கு எதிர்மாறாக நடப்பதையே நாம் காண்கிறோம், நாம் அவ்வாறு செய்யும்போது ஒரு மனதளவிலான விக்கிரகத்தை உருவாக்குகிறோம். சமூக ஊடகங்களின் அடிமைத்தனமும்கூட இந்த மன விக்கிரக ஆராதனையின் வகையில் தான் இருக்கும்.
சமூக ஊடங்களில் ஒரு உறவோ, அல்லது மனரீதியான ஒரு தொடர்பையும் இணக்கத்தையும் கொண்டிருப்பதில் வெகு சிறிய வித்தியாசமே இருக்கிறது. மக்களும் உறவுகளும் நாம் அனுபவிக்கவேண்டிய ஈவுகள் தான். ஆனால் நாம் இந்த உணர்வுகள் நம்மை ஒரு மனசோர்வின், தனிமையின், பொறாமையின், சந்தேகத்தின் அல்லது பயத்தின் கட்டுக்குள்ளாக கொண்டுசென்றுவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
கிறிஸ்துவில் உங்களுக்கு எல்லாம் உண்டு என்பதை நீங்கள் உங்களுக்கே நியாபகப்படுத்திக்கொள்ள வேண்டும். மற்ற ஒரு நபரிடம் உள்ள ஒரு காரியத்தை பிடித்து கொள்வதன் மூலம் நீங்கள் முழுமையாக உணர வேண்டிய தேவை இல்லை.
உங்கள் சுய மரியாதைக்காக யாரிடம் அல்லது எந்த பொருளிடம் நீங்கள் சார்ந்திருக்கிறீர்கள்?
இந்த தியான திட்டம் உங்களை ஊக்குவித்திருக்கும் என்று நம்புகிறோம். எங்கள் ஊழியத்தைக்குறித்து இன்னும் விவரம் அறிய என்ற இணையதளத்தை சந்தியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கை தேவ வார்த்தையோடு ஒத்துப்போகாதபோது, நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் ஒழுங்கற்ற நிலையில் இருந்து, உங்கள் நல்வாழ்வைத் தீர்மானிக்கத் தொடங்கும் போது, நீங்கள் உங்களாலேயே தயாரிக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் உணர்வீர்கள், அதிலிருந்து தப்பிப்பது கடினம். நீங்கள் சரியான சமநிலையைக் கண்டுபிடித்து, தேவனை எவ்வாறு நம்புவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். டோனி இவான்ஸ் உணர்வுகளின் சுதந்திரத்திற்கு வழிகாட்டுகிறார்.
More