உணர்ச்சி சிக்கல்களிலிருந்து பின் திரும்புவதுமாதிரி
சரீரத்திற்கு உணர்வுகள் இருப்பதுபோல மனதிற்கு எண்ணங்கள் இருக்கின்றன. நாம் ஜீவியத்தின் நிகழ்வுகளுக்கு நாம் எப்படி பிரதிகிரியை செய்கிறோம் என்று வெளிப்படுத்துகின்றன. எண்ணங்களில் தவறான வழியில் சென்றவர்களுக்கு வாழ போராட வேண்டியுள்ளது, அவர்கள் உதவியற்று, நம்பிக்கையற்று, விலைமதிப்பு இழந்து உணருகிறார்கள்.
எண்ணங்களின் போராட்டம் என்று சொல்லும்போது அது ஏதோ ஒரு நாள் நடக்கும் போராட்டம் அல்ல. அது உன் ஜீவியத்தில் வலையில் சிக்கிக்கொண்ட ஒரு எதிர்மறையான எண்ண ஓட்டமாக இருக்கிறது, அதன் விளைவு அடக்கமுடியாத அதைரியம், சோர்வு மற்றும் துக்கம்.
அநேகர் செய்வதுபோல (அந்த எதிர்மறையான எண்ணத்தை இல்லையென்று மறுப்பதோ, மருந்து, களியாட்டம், உடலுறவு அல்லது செலவு செய்வதன் மூலம்) செய்யாமல், உங்களுக்கு அதன் வேரை வெளிப்படுத்தி அதை வெல்ல உதவ நான் விரும்புகிறேன். தேவன் நீங்கள் இந்த எண்ண போராட்டத்தை ஐந்தோ, இருவதோ, நாற்பதோ, அல்லது ஒரு நாளோ கூட தூக்கி சுமக்க உங்களை சிருஷ்டிக்கவில்லை என்பது தான் உண்மை.
அதற்கு மாறாக, தேவன் கிறிஸ்துவில் முழு ஜீவியத்தை உங்களுக்கு வாக்கு அளித்திருக்கிறார். இயேசு சொன்னார், "நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்." (யோவான் 10:10) இல் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் தோற்று போன ஜீவியத்தை ஜீவிக்க உங்களை அவர் அழைக்கவில்லை. அவரே எல்லாவற்றின் மீதும் ஆளுகை கொண்டவர் என்று நீங்கள் அறிந்து விசுவாசிக்க அவர் விரும்புகிறார். அவர் உங்களை பார்த்து உங்கள் ஜீவியம் முழுதையும் கண்காணிக்கிறவர் என்று. கிறிஸ்து இலவசமாக அளிக்கும் அபரிவித ஜீவியத்தை நீங்கள் உணரவில்லை என்றால் ஜீவியத்தில் திரும்பி ஒரு தலைகீழான திசையில் நடக்கும் நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. தேவனிடம் திரும்பி, அவரிடம் கேளுங்கள் எந்த இடத்தில் அவரிடம் விசுவாசம் வைக்காமல் எண்ண போராட்டம் உங்களின் ஜீவியத்தை பிடித்துள்ளது என்று. உங்கள் துக்கத்தை தாண்டி காண அவர் உங்களுக்கு உதவ விரும்புகிறார் - அவருடைய பார்வையில் உங்கள் ஜீவியத்தை காண. எந்த காரியம் சீரழிந்து இருப்பதுபோல காட்சியளிக்கிறதோ அதை ஒரு அற்புதமாக அவரால் மாற்றமுடியும்.
உங்கள் ஜீவியத்தை கட்டிப்போட ஏதாவது எண்ணம் உங்களை ஆட்கொள்கிறதா? அவைகளை தேவனிடம் ஒப்புக்கொடுக்க ஏற்றுக்கொள்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கை தேவ வார்த்தையோடு ஒத்துப்போகாதபோது, நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் ஒழுங்கற்ற நிலையில் இருந்து, உங்கள் நல்வாழ்வைத் தீர்மானிக்கத் தொடங்கும் போது, நீங்கள் உங்களாலேயே தயாரிக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் உணர்வீர்கள், அதிலிருந்து தப்பிப்பது கடினம். நீங்கள் சரியான சமநிலையைக் கண்டுபிடித்து, தேவனை எவ்வாறு நம்புவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். டோனி இவான்ஸ் உணர்வுகளின் சுதந்திரத்திற்கு வழிகாட்டுகிறார்.
More