உணர்ச்சி சிக்கல்களிலிருந்து பின் திரும்புவதுமாதிரி
உங்களுக்கு உணர்வுகளை பற்றிய மிக முக்கியமான உண்மையை சொல்கிறேன்: உணர்வுகளுக்கு அறிவு இல்லை.
அவைகள் யோசிக்க முடியாது. வெறுமனே அவைகள் பிரதிகிரியை செய்கின்றன. உணர்வுகள் உணர்ச்சிகளை தூண்டும் படியாக எண்ணங்களை கடனுக்கு வாங்க தேவையிருக்கிறது. ஆகவே, உங்கள் எண்ணங்களை எந்த நபர் அல்லது பொருள் ஆட்கொள்கிறதோ, அதுவே நீங்கள் என்ன உணருகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறது. உங்கள் எண்ணங்களினால் உங்கள் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஆட்கொள்ளப்படுகின்றன. ஆகவே நீங்கள் உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளவேண்டும் என்றால், உங்கள் எண்ணங்களை முதலாவது ஆட்கொள்ளவேண்டும்.
உங்கள் எண்ணங்களை தேவனுடைய சத்தியத்திற்கு நேராக்கினால், நீங்கள் விடுதலையாவீர்கள்.
முக கண்ணாடியில் உங்களை பாருங்கள். நீங்கள் காணும் நபர் கிறிஸ்துவோடு கூட சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்திருக்கிறார். தேவனுடைய கண்களில், இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மரித்தபோது, நீங்களும் மரித்தீர்கள். அவர் அடக்கம் பண்ணப்பட்டபோது, அவரோடு நீங்களும் கல்லறையில் வைக்கப்பட்டீர்கள். அவர் உயிர்த்து எழுந்தபோது, நீங்களும் எழுந்தீர்கள். ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை சிறிது காலமாகத்தான் ஏற்றுக்கொண்டிருந்தாலும், அநேக ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவுக்கு நடைபெற்றதை உங்களுடைய ஆவிக்குரிய நிகழ்வுக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
சாத்தான் உங்கள் மனதில் எண்ணங்களை வைத்து அதை உங்களுடைய எண்ணங்கள் என்று நம்பவைப்பதில் தேர்ந்தவன். அவன் இவ்வாறு சொல்ல நீங்கள் கேட்கக்கூடும், "சுயமாக என்னை குறைவாக மதிப்பிடவும், மற்றவர்களோடு ஒப்பிடுவதிலும் சிக்கிக்கொண்டிருக்குகிறேன். இந்த உணர்விலிருந்து என்னால் தப்பமுடியாது. மனசோர்வுக்குள்ளாக விழும் இந்த பழைய பழக்கத்திலிருந்து என்னால் மீளமுடியாது." அவன் இதை சொல்லக்கூடும், இல்லாவிட்டால் நீங்களே இதை உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கக்கூடும். அதை மேற்கொள்ள, முதலாவது இந்த பொய்களை நீங்கள் நம்புவதை நிறுத்த வேண்டும். இந்த காரியங்களெல்லாம் பழைய நீ உயிரோடு இருந்தவருக்கு நடந்திருக்க கூடும், ஆனால் அந்த நபர் இயேசுவோடு சிலுவையில் மரித்துவிட்டார். நீங்கள் இப்போது ஒரு புதிய சிருஷ்டி. (2 கொரிந்தியர் 5:17).
உங்களை குறித்த எந்த பொய்களை நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கை தேவ வார்த்தையோடு ஒத்துப்போகாதபோது, நீங்கள் நிச்சயமாக வேதனையான விளைவுகளை அனுபவிப்பீர்கள். உங்கள் உணர்ச்சிகள் ஒழுங்கற்ற நிலையில் இருந்து, உங்கள் நல்வாழ்வைத் தீர்மானிக்கத் தொடங்கும் போது, நீங்கள் உங்களாலேயே தயாரிக்கப்பட்ட சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதைக் உணர்வீர்கள், அதிலிருந்து தப்பிப்பது கடினம். நீங்கள் சரியான சமநிலையைக் கண்டுபிடித்து, தேவனை எவ்வாறு நம்புவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். டோனி இவான்ஸ் உணர்வுகளின் சுதந்திரத்திற்கு வழிகாட்டுகிறார்.
More