ஜீவனைப் பேசுதல்மாதிரி

Speaking Life

6 ல் 6 நாள்

சமூக ஊடகம்

நாம் வாழும் சமூக ஊடக உலகில் கருத்துத் தெரிவிக்காமல் இந்த பேசும் வாழக்கை வேதபுத்தக திட்டத்தை என்னால் மூட முடியவில்லை. சமூக ஊடகங்கள் என்பது நமது எண்ணங்களில் பிரதான அங்கம் வகிக்கிறது, மேலும் அதன் மூலம் நம்முடைய நினைவுகளில் அதிக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமேயில்லை. இது நமக்குள் சென்று கட்சிதமாக நம்மை கட்டுப்படுத்தும் ஒரு மூல இடுபொருள். சமூக ஊடகத்தில் இருக்கிற நேர்மறை, உயிர் கொடுக்கும் மதிப்பைக் குறித்தும் பொதுவாக அதிலிருக்கும் எதிர்மறை மற்றும் அழிவுகரமான கண்ணிகளை குறித்தும் இதுவரையில் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?

தற்காலங்களில், அநேக ஜனங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். மிகுதியான அளவு எதிர்மறை தகவல்களின் உட்புகுதலும், மிகக் குறைந்த அளவே இயற்கையுடன் செலவிடும் நேரம் மற்றும் ஜீவன் தரும் தேவவார்த்தையை தியானிக்கும் நேரம் தான் இவைகளுக்கு காரணமாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்காகவோ இருக்கலாம், எவ்வளவு நேரம் அந்த திரையில் செலவிடுகிறீர்கள் என்பதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் அநேகர், உண்மையிலேயே அந்த திரையில் செலவிடுகிற அதிகமான சமயத்தைக் குறித்து கணக்கெடுத்து அது நமக்கு தெரிய வரும்போது மிகுந்த ஆச்சரியமடைவோம். என்னை தவறாக நினைக்காதீர்கள். ஜீவனளிக்கும் சில படங்களும், காணொளிகளும், விளம்பரங்களும் உள்ளன என்று நான் நம்புகிறேன். ஆனாலும், இதுவரை நாம் உபயோகமில்லாத, சுய மகிமையைத் தேடுகிற, எதிர்மறையான செய்திகளால் நம்மை உரமேற்றி கொள்வது போன்ற காரியங்களால் தான் நம்முடைய நினைவுகளை நிரப்பியிருக்கிறோம். நம்மில் அநேகர் திரையில் வீணடிக்கும் சமயம், அதினிமித்தம் வருகிற மனஅழுத்தம் போன்றவைகளைக்குறித்து அறியாமையுடைவர்களாகவே இருக்கிறோம். நம்மில் அநேகர் இந்த சமூக ஊடகங்களிலிருந்து நமக்குள் என்ன செல்கிறது அதின் பின்விளைவு எப்படியாக நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது என்பது குறித்து பொருட்படுத்தாமலே இருக்கிறோம். தேவன் ஒருவரைத் தவிர நாம் வேறெந்த நபர்களின் கருத்துக்களைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை.

இந்த உலகத்தில், அன்றாடம் கேள்விப்படுகிற செய்திகளும், நம்மை சுற்றிலும் நடக்கிற காரியங்களும், நம்மை நாம் ஒரு வனாந்தரத்தின் வழியாகவோ, அல்லது வறண்ட தரிசு நிலத்திலோ நடந்து செல்வது போல உணரவைக்கமுடியும். வாழத்துடிக்கும் நம்முடைய ஆத்துமாவுக்கு நாம் வாழ்வளிக்கும் ஆகாரத்தை ஊட்டவேண்டும். தேவனுடைய வார்த்தைகள். தேவனுடைய சிருஷ்டிப்புகள். தேவனோடுள்ள ஐக்கியம். வெகுகாலமாக இந்த சமூக ஊடகத்திரையில் வீணடித்த வனாந்திர மற்றும் தரிசுநில யாத்திரையினால் உங்கள் மனம் சோர்ந்து காணப்படுகிறதா? ஜீவ தண்ணீரிடத்தில் வாருங்கள். தேவனாகிய கர்த்தர் உங்கள் ஆத்துமாவை திருப்தி செய்வார். அந்த சமூக ஊடக திரையை அப்படியே மூடிவிட்டு, தேவனுடைய வார்த்தையை திறந்து கொள்ளுங்கள். தேவனிடத்தில் உங்களை அங்கேயே சந்திக்கும்படியாகவும் அவருடைய வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் ஜீவனுள்ளதாக செய்யும்படியாகவும் கேளுங்கள். அதன்பிறகு, திறந்த வெளியில் செல்லுங்கள், சிறிது நடந்து பாருங்கள். பட்டம் விடுங்கள். நல்ல புத்தகங்களை வாசியுங்கள். உங்கள் ஆத்துமாவுக்காக கரிசனை கொள்ளுகிற நல்ல நண்பனோடு அடிக்கடி சந்தியுங்கள்.

சமூக ஊடகத்திலிருந்து விடுப்பு பெற உங்களை நான் சவால் விடலாமா? இதுகுறித்து ஜெபியுங்கள். இதற்காக கட்டுப்பாட்டுடன் குறிப்பிட்ட கால நேரம் மட்டும் ஒதுக்குங்கள். இது ஒரு உபவாசம் போன்றது. காலம் செல்ல செல்ல இந்த விடுப்பின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மதிப்பை நீங்கள் உணரும்போது நீங்கள் வேண்டுமானால் வெகு குறைவான நேரம் தேவைக்கு மட்டும் சமூக ஊடகத்திற்கு திரும்பலாம். கிறிஸ்துவை மகிமைப்படுத்துகிற கருத்து, படம் மாத்திரம் பதிவேற்றம் செய்யலாம். இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், நமது தேசத்தில் அநேகமான வகுப்புவாதங்கள் இருக்கிற நிலையில், காயப்பட்டிருக்கிற திரள் கூட்டமான ஜனங்களுக்கு, நீங்கள் செய்கிற காரியம் உற்சாகம் ஊட்டும்படியாகவும், நல்ல மாதிரியாகவும், ஜீவனளிக்கும் செயலாகவும் அமையும்படி இருக்கட்டும்.

நாம் ஒரு சமூக ஊடகத் திரையில் இருக்கும் நேரத்தை முக்கியமான விஷயங்களைப் பற்றி வாசிக்கவும், மற்றும் முக்கியமான ஒருவருடன் நேரத்தை செலவிடவும் இதைப் பயன்படுத்தவும். இப்படியிருந்தால் வாழ்க்கை மிகவும் எளிமையானதாகவும், குறைந்த மன அழுத்தமாகவும் இருக்கும். நாம் இன்னும் அதிகமான நம்பிக்கையை வைத்திருக்க முடியும்!

நீங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ, பேச, கொடுக்க விரும்பினால், உங்கள் நினைவுகளுக்குள் நீங்கள் அனுப்புகிற காரியங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். உள்வாங்குகிற செய்திகள் எப்படியோ, அப்படியே வெளிவருகிற கிரியைகளும் அமையும். நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்பொழுதே தொடங்குங்கள்.

ஆழ்ந்து சிந்தியுங்கள்:சமூக ஊடகத் திரை தொடர்பு நேரத்தை குறைக்க அல்லது முற்றிலும் நிறுத்த முடியும் நீங்கள் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்? உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் செய்யக்கூடிய சில பிரயோஜனமாக காரியங்கள் என்னென்ன?

ஜெபம்: தேவனே! எனது சமூக ஊடகத் திரை தொடர்பு நேரத்தைக் கட்டுப்படுத்தவும், உங்களுடன் எனது நேரத்தை அதிகரிக்கவும் எனக்கு உதவுங்கள். நான் தைரியமாக வாழ விரும்புகிறேன், மற்றவர்களின் இதயங்களில் வாழ்க்கையை பேச விரும்புகிறேன். அது என்னிடத்திலிருந்து தொடங்குகிறது என்பதை நான் அறிவேன்.

__________________________________________________________________

திட்டமிடலும், கடை குறிப்பும்: ராக்சானின் ஆர்வம் ஜீவனளிக்கும் உண்மைகளை மற்றவர்களின் இதயங்களில் பேசுவதே. மேலும் சிறு கூடுகை, மாநாடுகளில் பேசவும் அவர் விரும்புகிறார். அவர் இதுகுறித்த ஆழ்ந்த பட்டறைகளை நடத்துகிறார் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பயிற்சியாளராக நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுடன் பணிபுரிகிறார்.நீங்கள் அவரைத் தொடர்புகொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். RoxanneParks.com. அவரைத் தொடர்பு கொள்ளுவது அவரைக் காணப்படுத்துவதற்கு சமமானது.

நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Speaking Life

வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய ரோக்ஸேன் பார்க்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.roxanneparks.com/home.html