ஜீவனைப் பேசுதல்மாதிரி

Speaking Life

6 ல் 4 நாள்

சுயம் பேசுதல்

நாம் கேட்பதிலேயே அதிக ஓசையுள்ள சத்தம் நம்முடைய சொந்த சத்தமே. நமக்குள் இருக்கும் சத்தம்.... நாம் நம் சுயத்தைக் குறித்துப் பேசுவது நமக்கு தெரியாமல் மிக அமைதியாக நடந்துகொண்டிருந்தாலும் மிகுந்த ஆற்றலுள்ளது. சுயம் பேசுதல் ஒரு நிஜ நிகழ்வுதான். அது நாம் விழிப்புடன் இருக்கும் பொழுதெல்லாம் செய்கிற ஒரு செயல். அது ஒரு நரம்பு-எழுத்தியல் நிகழ்வின் நிலை தான். இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருப்பதனால், இது நம் நனவை வடிவமைத்து சிற்பமாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

நம்முடைய எதிராளி எப்பொழுதும் அழிக்கிற செயலை செய்கிறவன். அவன் நம்முடைய சிறுவயதிலிருந்தே பொய்யான காரியங்களை நமக்குள் விதைத்து நாம் பெரியவர்களாகும் பொது அது தான் உண்மை என்று நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறவன். நமக்கு நம்மை பற்றிய ஒரே உண்மை என்னவென்றால் நம்முடைய தேவன், நம்மை பின்னி படைத்தவர், சகலமும் அறிந்தவர், வடிவமைத்தவர், உருவாக்கினர் நம்மை பற்றி என்ன உரைக்கிறார் என்பது தான். நம்மால் இந்த இரண்டு சத்தங்களையும் வேறு பிரித்து அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? ஒரு சத்தம் ஜீவனை நமக்கு அளிக்கிறது; மற்றொரு சத்தம் மரணத்தை கொண்டு வருகிறது, அது தொடக்கத்தில் மெதுவாக சுமையல்லாததுபோல தோன்றி முடிவிலே அளிக்கப்படுகிற நித்திய மரணம்.

நம்முடைய நினைவுகள் குமிழிகள் போல பொங்கி வார்த்தைகளாக வெளிவரும் என்று நாம் அறிந்துகொண்டோம். அதையடுத்து, நாம் நம்முடைய சுயம் சுயத்தை குறித்துப் பேசுகிறதை கேட்டோம். நாம் எதைக்குறித்து அடிக்கடி பேசுகிறோமோ, அது நம் வாழ்வில் நிஜமாகிவிடுகிறது. நாம் நம் சுயத்தை குறித்து நான் ஒரு மூடன், அறிவில்லாதவன், உடல் பருமனானவன் என்று நினைத்தாலோ அல்லது பேசினாலோ, நாம் அப்படியாகவே வாழ்ந்து அதற்கேற்றாற்போல மாறி விடுகிறோம். நாம் நம்மை படைத்தவருடன் உடன்பட்டு, நடுக்கத்துடன் அவர் முன்னிலையில் வந்து, நான் அற்புதமான விதத்தில்? தலை சிறந்த தனித்துவமாக படைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் நான் ஒரு இளவரசி என்றும் அறிக்கையிடுவோமானால்? நாம் ஒரு புதுவிதமான வாழ்க்கையை வாழ்வோம். நாம் புது விதமான முறையில் நினைவுகளை செலுத்துவோமானால், புது விதமாக வாழ்வோம். உங்கள் நினைவுகளின் விதங்கள் மாறுபடுமேயானால், அது நீங்கள் பேசுகிற வார்த்தையையும் உலகத்தில் நீங்கள் செயல்படுகிற கண்ணோட்டத்தையும் மாற்றிவிடும்.

நேர்மறையான சுயம் பேசுதல்: நேர்மறையான சுயம் பேசுதல் என்பது நமது தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும் எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும் என்பதை மக்கள் அதிகம் அறிந்து கொண்டிருக்கிறார்கள். இது மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான உத்தி. நேர்மறையான வார்த்தைகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது, ஏனெனில் அவை நம் நம்பிக்கையை அதிகரிக்கவும், நம் மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை அகற்றவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. நேர்மறையான சுயம் பேசுதலில் தலைசிறந்து காணப்படுகிறவர்கள் அதிக நம்பிக்கை, ஊக்கம் கொண்டவர்கள் மற்றும் சிறந்த படைப்பாளிகள் என்றும் கருதப்படுகிறது. தேவன் நம்மை ஜீவனுள்ளவர்களாகும்பொருட்டும், பரிபூரணப்படுவதற்காகவும் படைத்தார். உங்கள் சுயம் பேசுதல் உங்களை குறித்த அவருடைய திட்டத்துடனும் அவருடைய சொற்களுடனும் ஒத்துப்போகிறதா?

எதிர்மறையான சுயம் பேசுதல்: நம்முடைய சுயத்தின் எதிர்மறையான சுயம் பேசுதலின் விளைவுகளையும் நாங்கள் அறிந்துகொண்டிருக்கிறோம். எதிர்மறையான சுயம் பேசுதல் உங்கள் சுயமரியாதை, வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வை, உங்கள் ஆற்றல் நிலைகள், உங்கள் உறவுகள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை கூட பாதிக்கும். எதிர்மறையான சுயம் பேசுதலைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம், இந்த அழிவை கொண்டுவரும் பழக்கத்தை முழுவதும் நிறுத்துவதற்கு தேவையான செயல்முறையை நாம் தொடங்கலாம். அந்த எதிர்மறை சத்தத்தை மௌனமாக்கி விட்டு, ஜீவனையும், சத்தியத்தையும் நாம் வாழ்வில் பேச வேண்டிய நேரம் இது.

நம்முடைய சுயம் பேசுதல் முக்கியமானது. கவனம் செலுத்துங்கள். வழக்கத்திற்கும் அதிகமாக, உங்களைக்குறித்து எதிர்மறையாகப் பேசுவதும், நீங்கள் அதைச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு முற்றிலும் தெரியாமலே செய்கிறீர்கள். அடுத்த இருபத்தி நான்கு மணிநேரங்களில், உங்கள் நினைவுகளைக் குறித்து கவனம் செலுத்துவதற்கும், உங்களைக் குறித்து நீங்கள் எவ்வாறு பேசுகிறீர்கள் என்பதையும் கவனிப்பீர்களா என்றே ஆச்சரியமாக இருக்கிறது? எதிர்மறையான சுயம் பேசுதலை முழுவதும் அகற்றிப்போட ஒரு உறுதிப்பாட்டைச் செய்யுங்கள். மேலும், உங்கள் நினைவுகளையும் வார்த்தைகளையும் அவருடைய வல்லமை நிறைந்த சத்தியத்துடன் ஒருமித்துப்போகவும் செய்யுங்கள்.

ஆழ்ந்து சிந்தியுங்கள்:

தேவன் உங்களைப் பற்றி என்ன உரைக்கிறார் என்பதோடு உங்கள் சுயம் பேசுதலை எப்படியெல்லாம் ஒத்துப்போக செய்யமுடியும்? கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா, அதை குறித்துப் பேசுகிறீர்களா?

ஜெபம்:

தேவரீர் என்னைக்குறித்து என்ன உரைக்கிறீர் என்பதை நம்புவதற்கு உதவுங்கள். உம்முடைய சத்தம் என் வாழ்க்கையில் உரத்த சத்தமாக இருக்க உதவுங்கள். உம்முடைய இருதயத்தின் சத்தத்தை என் இருதயத்தில் நான் பேசட்டும்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Speaking Life

வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள், சக்தி நிறைந்த வார்த்தைகள்! கட்டியெழுப்பும் வார்தைகள் அல்லது மனதை கிழிக்கும் வார்த்தைகள். உயிரைக் கொடுக்கும் வார்தைகள் அல்லது மரணத்தைக் கொண்டுவரும் வார்த்தைகள். தேர்வு நம்முடையது. நமது வார்த்தைகளில் உள்ள குறிப்பிடத்தக்க சக்தியை மதிப்பீடு செய்வோம்.

More

இந்த திட்டத்தை வழங்கிய ரோக்ஸேன் பார்க்சுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://www.roxanneparks.com/home.html